மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ஆர்பிஐ?.. எகிறும் நாணய கொள்கை குழு கூட்ட எதிர்ப்பார்ப்பு!
Monetary Policy Announcement Meeting | இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 03, 2025 முதல் டிசம்பர் 05, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ரெப்போ வட்டி விகித குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) தனது நாணய கொள்கை குழு கூட்டத்துக்கு (Monetary Policy Announcement Meeting) தயாராகி வருகிறது. இந்த கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாணய கொள்கை குழு கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா, எவ்வளவு வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆர்பிஐ நாணய கொள்கை குழு கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு கூட்டத்தை டிசம்பர் 3, 2025 முதல் டிசம்பர் 5, 2025 வரை நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில் டிசம்பர் 05, 2025 அன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகித குறைப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பண வீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக குறைவாக உள்ளது, உறுதியான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைய வழிவகை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!




1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதாவது இதுவரை 1 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.50 சதவீதமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் மூன்று முறை அதிரடியாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!
ரெப்போ வட்டி 25 புள்ளிகள் வரை குறையலாம்
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் உள்ள அபாயங்களையும், 2026 – 2027 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் பணவீக்கம் 4 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு அடுத்த வாரம் நடைபெற உள்ள நாணய கொள்கை குடு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படைகள் புள்ளிகள் குறைய வாய்ப்பு உள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.