ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. வீடு, வாகன கடன் வட்டி விகிதம் குறையபோகுது..
Repo Rate Cut Impact On Loan Interest Rates | இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில், கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்கும்.
இந்தியாவின் நிதி சார்ந்த விவகாரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரெப்போ வட்டி (Repo Rate) தொடர்பாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 05, 2025 அன்று ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதன் காரணமாக 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் நிலை உருவாகியுள்ளது.
கடன் வட்டி விகிதங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் ரெப்போ வட்டி
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம். இந்த நிலையில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால், அது வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விதிகளை குறைக்கும். இதன் காரணமாக வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். எனவே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் பட்சத்தில் அது கடன் பெற்ற மற்றும் கடன் பெறும் நபர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : UAN எண் உடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவு.. இனி இதை செய்ய முடியாது.. EPFO திட்டவட்டம்!




இவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் – கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மற்றும் ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வீட்டு கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் என அனைத்திற்கும் இது பொருந்தும். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, ஏற்கனவே கடன் வாங்கியுள்ள நபர் இந்த ரெப்போ வட்டி விகிதத்தில் பயன்பெற வேண்டும் என்றால் அவர் Floating Rate முறையில் கடன் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அதற்கு ஏற்ப உங்களது கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
இதையும் படிங்க : பணி ஓய்வுக்கு முன்பு ரூ.1 கோடி வேண்டுமா?.. அப்போ இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் Floating Rate முறையில் கடன் வாங்கியிருந்தும் ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்த பிறகு உங்களது வங்கி நீங்கள் வாங்கியுள்ள கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்றால் நீங்கள் அது குறித்து உங்கள் வங்கியிடம் உரிய முறையில் கேட்டு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.