Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026-ல் தான் ஆட்டமே இருக்கிறது.. தங்கம் விலை அதிரடியாக உயரும்.. ஷாக் கொடுக்கும் தரகு நிறுவனம்!

Gold Price Will Hike In 2026 | 2025-ல் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், 2026-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில், 2026-ல் தங்கம் மேலும் உயர்வை சந்திக்கும் என்று வென்சுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026-ல் தான் ஆட்டமே இருக்கிறது.. தங்கம் விலை அதிரடியாக உயரும்.. ஷாக் கொடுக்கும் தரகு நிறுவனம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Dec 2025 16:23 PM IST

நகை பிரியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. காரணம், 2025-ல் தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அதாவது, 2025 அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கியது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் என்றும், சாமானியர்களின் எட்டா கனியாக தங்கம் மாறிவிடும் என்றும் மக்கள் கலக்கமடைந்தனர். இதற்கிடையே தான் தங்கம் சர்வதேச சந்தையில் கடும் சரிவை சந்தித்து ரூ.90,000-க்கு இறங்கியது. தற்போது தங்கம் மீண்டும் உயர்வை நோக்கி பயணம் செய்துக்கொண்டு வருகிறது. இவ்வாறு தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் நிலவரம் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எழ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான், தரகு நிறுவனம் ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

2026-ல் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரிக்கும் – வென்சுரா

இன்னும் ஒருசில நாட்களில் 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், 2026-ல் தங்கத்தின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள், வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்கள் தங்களது கணிப்பை வெள்யிட்டு வருகின்றனர். இந்த நிலையில், வென்சுரா (Ventura) என்ற தரகு நிறுவனம் 2026-ல் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறியுள்ளதாவது, தற்போதைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 4,197 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே 2026-ல் 4600 அமெரிக்க டாலர்கள் முதல், 4800 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யப்படும் என்று கூறியுள்ளது. அதாவது, 2026-ல் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,31,800-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வந்த பெரிய நிம்மதி.. புதிய வாடகை விதிகளை அறிமுகம் செய்த மத்திய அரசு!

மூன்று முக்கிய காரணங்கள்

பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கும், பணவீக்கம் அதிகரிக்கும், அமெரிக்க பொருளாதாரத்தில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் உள்ளிட்ட மூன்று முக்கிய காரணங்களை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை மேலும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக வென்சுரா தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து அமெரிக்க மத்திய வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் 2026-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.