Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Year Ender 2025: ஜிஎஸ்டியில் ஏற்பட்ட மாற்றத்தால் 375 பொருட்களின் விலை குறைப்பு – மக்கள் மகிழ்ச்சி

GST 2.0 : இந்தியாவில் இந்த 2025 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி 2.0 பொருளாதாராத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக 375 பொருட்களின் விலை குறைந்ததால், வாங்கும் திறன் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Year Ender 2025: ஜிஎஸ்டியில் ஏற்பட்ட மாற்றத்தால் 375 பொருட்களின் விலை குறைப்பு – மக்கள் மகிழ்ச்சி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Dec 2025 16:26 PM IST

வரலாற்றில் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஆண்டாக 2025 ஆம் ஆண்டு பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி (GST) வரியில் மாற்றம், இபிஎஃப் 3.0 (EPFO 3.0), தொழிலாளர் சட்டம், தங்கத்தின் வரலாறு காணாத உயர்வு என இந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி 2.0 இந்த 2025 ஆண்டு செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் படி இதுவரை 5%, 12%, 18%, 28% நான்கு பிரிவுகளாக இருந்த ஜிஎஸ்டி, 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய பிரிவுகளாக மாற்றப்பட்டன. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்ததால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ் மறுசீரமைப்பால் விலை குறைந்த பொருட்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான மளிகை, மருந்துகள், ஸ்டேஷனரி, ஆடைகள் என அடிப்படைத் தேவைகளின் விலை வெகுவாக குறைந்தது. இதனால் மக்களின் மாதாந்திர பட்ஜெட்டின் சுமை குறைந்தது. குறிப்பாக வீடுகளில் செலவுகள் 13 சதவிகிதம் அளவுக்கு குறைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் ஜன.1 முதல் இவற்றை செய்ய முடியாது!

மேலும் சிறிய ரக கார் வாங்குபவர்கள் ரு.70,000 வரை சேமித்தனர். ஸ்டேஷனரி மற்றும் ஆடைகளுக்கு ஆகும் செலவில் 7 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை சேமிக்க முடிந்தது. லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு 18 சதவிகிதம் வரை சேமிக்க முடிந்தது.

மேலும் 350 சிசி வரை உள்ள பைக்குகளுக்கு ரூ.8,000 , 32 இஞ்ச் மற்றும் அதற்கு மேலுள்ள டிவிக்களுக்கு ரூ.3,500 வரை சேமிக்க முடிந்தது. ஏசிகளுக்கு ரூ.2,800 வரையும், சேமிக்க முடிந்தது. குறிப்பாக 375 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளது. இதனால் எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது.

ஜிஎஸ்டி 2.0 குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு

இதையும் படிக்க : இந்த ஒரு விஷயத்துக்கு உங்களுக்கு 84% வரி விதிக்கப்படும்.. புதிய வருமான வரி விதிகள் கூறுவது என்ன?

இது குறித்து பதிவிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில், செப்டம்பர் 22, 2025, நவராத்திரி முதல் நாளிலிருந்து புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலாகின்றன. இது நம் நாட்டிற்கு கூடுதல் வளர்ச்சியையும் ஆதரவையும் கொண்டு வரும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சேமிக்கும் திறன் அதிகரிக்கும், மேலும் நம் பொருளாதாரத்துக்கும் புதிய வலிமை சேர்க்கும் என்றார்.