Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதலீடும் செய்யனும், பணமும் வேணுமா?.. அப்போ இந்த திட்டம் தான் உங்களுக்கு சரியானதாக இருக்கும்!

Post Office Monthly Income Scheme | தபால் நிலையங்கள் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெற முடியும்.

முதலீடும் செய்யனும், பணமும் வேணுமா?.. அப்போ இந்த திட்டம் தான் உங்களுக்கு சரியானதாக இருக்கும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Dec 2025 13:07 PM IST

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பொதுமக்கள் தங்களது எதிர்கால தேவைகளுக்காக கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டு என்ற நிலை உள்ளது. மாறி வரும் பொருளாதார சூழல்கள், விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவை எதிர்பாராத நேரங்களில் கடும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். அதுதவிர மருத்துவம், திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட தேவைகளுக்காகவும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. என்னதான் சேமிப்பு மற்று முதலீட்டுக்கான தேவை இருந்தாலும், மாதாந்திர தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலர் சேமிப்பு மற்றும் முதலீடு செய்யாமல் உள்ளனர். இந்த நிலையில், முதலீடும் செய்து மாதம் மாதம் அதன் மூலம் வருமானமும் பெற உதவும் ஒரு சிறப்பான திட்டம் குறித்து பார்க்கலாம்.

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்

தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீடு மற்றும் மாத வருமானம் இரண்டையுமே சாத்தியமாக்க முடியும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு மாத வருமானம் பெற முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Lakme, Westside நிறுவனங்களை கட்டமைத்த டாடா குழுமத்தின் முக்கிய நபர்.. சிமோன் டாடா காலமானார்!

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு மாத வருமானம் கிடைக்கும்?

இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு தனி நபர் ரூ.1,000 முதல் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே மூன்று பேர் கொண்ட கூட்டு கணக்கு வைத்துள்ளீர்கள் என்றால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இப்போது இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 7.4 சதவீதம் என்ற பட்சத்தில் மாதம் ரூ.3,083 வட்டியாக கிடைக்கும். இதுவே நீங்கள் அதிகபட்ச தொகையான ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் மாதத்திற்கு ரூ.5,500 கிடைக்கும்.

இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு, கார், பைக் லோனுக்கு EMI குறைகிறது

இந்த திட்டத்தில் கூட்டு கணக்கில் நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் மாதம் ரூ.9,250 கிடைக்கும். முதலீடும் செய்ய வேண்டும், ஆனால், அதற்கான பலன்களை பெற காத்திருக்க கால அவகாசம் இல்லை என்றால் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.