இந்த ஒரு விஷயத்துக்கு உங்களுக்கு 84% வரி விதிக்கப்படும்.. புதிய வருமான வரி விதிகள் கூறுவது என்ன?
84 Percentage Tax on Unexplained Cash Transactions | இந்தியாவில் பணம் மற்றும் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை சில முக்கிய விதிகளை அமலில் வைத்துள்ளது. இந்த நிலையில், பண பரிவர்த்தனையில் செய்யும் இந்த ஒரு சிறிய தவறு மூலம் 84% வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக புதிய வருமான வரி விதிகள் கூறுகின்றன.
புதிய வருமான வரி கொள்கைகள் மூலம் இந்தியாவில் பண பரிமாற்றம் கடும் சவால்களை எதிர்க்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் உரிய விளக்கம் மற்றும் ஆதாரங்கள் இல்லாத பணம் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு 84 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரி, அபராதம், கட்டணம் ஆகியவை இதில் அடங்கும். இந்த நிலையில், புதிய வருமான வரி விதிகள் (New Income Tax Rules) கூறுவது என்ன, பண பரிவர்த்தனைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பணம் குறித்த விதிகளை கடுமையாக்கிய வருமான வரித்துறை
இந்தியாவில் பணம் தொடர்பான விதிகளை வருமான வரித்துறை (Income Tax) மிக கடினமானதாக மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகளின்படி தனிநபர் மற்றும் தொழில்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக வருமான வரித்துறை உங்களது வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது உரிய விளக்கம் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் உங்கள் வீட்டில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு 84 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?




வருமான வரித்துறைக்கு எப்படி தெரிய வரும்?
நீங்கள் பெரிய அளவில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் வருமான வரித்துறைக்கு மிக சுலபமாக தெரிய வந்துவிடும். நீங்கள் ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் அது குறித்து உங்களது வங்கி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துவிடும். இதுவே நீங்கள் ஒரு அண்டில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தால் நீங்கள் பணம் எடுக்கும்போதே அதற்கான டிடிஎஸ் வரியை வங்கிகள் பிடித்துக்கொள்ளும்.
இதையும் படிங்க : Lakme, Westside நிறுவனங்களை கட்டமைத்த டாடா குழுமத்தின் முக்கிய நபர்.. சிமோன் டாடா காலமானார்!
100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட கூடிய பண பரிவர்த்தனைகள்
கடைகள் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு நாளுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் வாங்க கூடாது. இதேபோல நிலம் விற்பனை செய்யும்போது ரூ.20,000-க்கும் கையில் பணம் வாங்கினால் அதுவுமே அபராதத்திற்கு உரியது என்ற விதிகள் ஏற்கனவே உள்ளன. மோசடிகள், கருப்பு பணம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் வருமான வரித்துறை இத்தகைய கடுமையான விதிகளை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.