Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?
New Aadhaar App: இந்த 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பாக ஆதார் பயன்பாடுகளை பாதுகாக்க புதிய ஆதார் ஆப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால், அடையாள சரிபார்ப்புக்காக இனி ஆதார் கார்டின் ஒரிஜினல் அல்லது லேமினேஷன் செய்யப்பட்ட நகல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை
இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள ஆதார் (Aadhaar) கார்டை இனி எப்போதும் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய ஆதார் மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய டிஜிட்டல் மாற்றமாக பார்க்கப்படுகறது. இந்த புதிய ஆப் மூலம், ஆதார் கார்டை டிஜிட்டல் வடிவில் ஸ்மார்ட்போனில் (Smartphone) வைத்துக் கொள்ளலாம். மேலும், தேவைப்படும் இடங்களில் இந்த புதிய ஆதார் மொபைல் ஆப் மூலம் சமர்பித்துக்கொள்ளலாம். முன்பு போல நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆதார் எடுத்து செல்ல தேவையில்லை. ஆதாரை மறந்து வைத்து விட்டாலும் பிரச்னை இல்லை. இந்த புதிய மொபைல் ஆப் அதற்கு மாற்றாக இருக்கும்.
புதிய ஆதார் செயலி
இந்த புதிய ஆதார் ஆப்பின் மூலம், உங்கள் ஆதார் விவரங்களை உங்கள் மொபைல் போனிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால், அடையாள சரிபார்ப்புக்காக இனி ஆதார் கார்டின் ஒரிஜினல் அல்லது லேமினேஷன் செய்யப்பட்ட நகல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய ஆதார் ஆப்பில் பயோமெட்ரிக் பாதுகாப்பு, முக ஸ்கேன் முறையில் லாக், அன்லாக் செய்யு் வசதி போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உங்கள் தனிப்பட்ட ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். பிறர் தவறாக பயன்படுத்தும் அபாயமும் குறையும்.
இதையும் படிக்க : Year Ender 2025: ஜிஎஸ்டியில் ஏற்பட்ட மாற்றத்தால் 375 பொருட்களின் விலை குறைப்பு – மக்கள் மகிழ்ச்சி




ஒரே மொபைல் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களையும் இந்த ஆப்பில் பார்க்க முடியும். இது குடும்ப நிர்வாகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில், தேவையற்ற தகவல்களை மறைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பெயர் மற்றும் புகைப்படம் மட்டும் வைத்துக்கொண்டு, முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களை மறைத்து வைத்துக்கொண்டு பகிரலாம். இது உங்கள் பிரைவசி முழுமையாக பாதுகாக்கப்படும்.
புதிய ஆதார் ஆப்பை எப்படி டவுன்லோடு செய்யலாம்?
இந்த புதிய ஆதார் ஆப்பை, ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவும், ஐபோன் பயனர்கள் ஆப்பிள் பிளே ஸ்டோர் மூலமாகவும் ஆதார் ஆப் (Aadhaar App) என்று தேடி வழஹ்க்கமான ஆப்பை போல டவுன்லோடு செய்யலாம். இது அரசின் செயலி என்பதால் முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. டவுன்லோடு செய்த பிறகு ஆப்பினுள் நுழைந்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்யலாம். ஓடிபி சரிபார்ப்பு முடிந்தது. அனைத்து விவரங்களையும் பார்த்துக்கொள்ளலாம்
இதையும் படிக்க : Year Ender 2025: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 – அதிரடியாக குறைந்த கார், பைக் விலை
இந்த ஆப்பை முதன்முறையாக பயன்படுத்தும்போது, முக ஸ்கேன் மூலம் அடையாள உறுதிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஆதார் கார்டு விவரங்களை பிறர் தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும். மேலும் பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய முடியும். இது இந்த செயலியின் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இணையம் இல்லாமலும் ஆப்பைப் பயன்படுத்தலாமா?
சில அம்சங்களை ஆஃப்லைன் முறையிலும் பயன்படுத்த முடியும். ஆனால் முதன்முறையாக லாகின் செய்யும்போது இண்டெர்நெட் அவசியம். பின்னர் ஒருமுறை லாகின் செய்யப்பட்டு உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு இணையம் இல்லாத நேரங்களிலும் ஆதார் விவரங்களை பார்க்க முடியும். ஆனால் அனைத்து வசதிகளையும் முழுமையாக பயன்படுத்த இண்டர்நெட் இணைப்பு அவசியம்.