ஒன்பிளஸ் முதல் ஓப்போ வரை.. 2025-ல் அறிமுகமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
Best Budget Smartphones 2025 | 2025 ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், 2025-ல் அறிமுகமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிலும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், 2025 ஆம் அண்டில் அறிமுகமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் (Budget Smartphones) என்ன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-ல் அறிமுகமாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
ஒன்பிளஸ், மோட்டோரோலா, விவோ ஆகிய நிறுவனங்கள் தங்களது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 5ஜி
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 5ஜி ஸ்மார்ட்போனை (OnePlus Nord CE 5 5G Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 ஏபக்ஸ் பிராசசர் அம்சம், 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி + 8 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.24,998-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




விவோ டி4 ப்ரோ
விவோ நிறுவனம் தனது விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனை (Vivo T4 Pro Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம், 50 எம்பி + 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இது 32 எம்பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6500 mAh பேட்டரி மற்றும் 90 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
ரியல்மி 15 ப்ரோ
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனை (Realme 15 Pro Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம், 50 எம்பி + 50 எம்பி ரியர் கேரமாவை கொண்டுள்ளது. இதேபோல 50 எம்பி முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7000 mAh பேட்டரியை கொண்டுள்ள நிலையில், 80 வாட்ஸ் அல்ட்ரா சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.29,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனை (Motorola Edge 60 Pro Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் எடிஷனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் கொண்டுள்ள நிலையில், 50 எம்பி + 50 எம்பி + 10 எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,000 mAh பேட்டரியை கொண்டுள்ள நிலையில், 90 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.28,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் Reminder செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
விவோ வி60 இ
விவோ நிறுவனம் தனது விவோ வி60 இ ஸ்மார்ட்போனை (Vivo V60e Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் கொண்டுள்ள நிலையில் 200 எம்பி + 8 எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி முன்பக்க கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6500 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 90 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.28,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இகியூஓஓ நியோ 10 ஆர்
ஐகியூஓஓ நிறுவனம் இகியூஓஓ நியோ 10 ஆர் ஸ்மார்ட்போனை (IQOO Neo 10 R Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் கென் 3 பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் கொண்டுள்ள நிலையில், 50 எம்பி + 8எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6400 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 80 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : பிளிப்கார்ட் Buy Buy சேல்.. நத்திங் ஸ்மார்ட்போன்கள், வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
ஓப்போ கே 13 டர்போ 5ஜி
ஓப்போ நிறுவனம் தனது ஒப்போ கே13 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனை (Oppo K13 Turbo 5G Smartphone) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 16 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 7000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 80 வாட்ஸ் சுப்பர் VOOC சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.