நாளை இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
Realme P4 Power Smartphone | ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நாளை (ஜனவரி 29, 2026) ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், அதிக மக்கள் பயன்படுத்த கூடிய ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ரியல்மி (Realme). இவ்வாறு உலக அளவில் ஏராளமான மக்கள் ரியல்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனை (Realme P4 Power Smartphone) அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாளை (ஜனவரி 29, 2026) இந்தியாவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் நாளை அறிமுகமாகும் ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன்
இந்த ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் 10,000 mAh பேட்டரியுடன் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்யும் பட்சத்தில் பாதி நாள் அதனை பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்களின் உடல் நலத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரி நீடித்து உழைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், 8 ஆண்டு கேரண்டியை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜனவரி 2026ல் இந்தியாவில் அறிமுகமாகும் 3 ஸ்மார்ட்போன்கள்: என்னென்ன? அதன் விலை எவ்வளவு?
கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்
REALME P4 POWER💥
Expected Specs 🔥
📦 Solid Build – 218g
📱 Quad-Curved AMOLED Display ✨
🚀 Dimensity 7400 Chipset (Expected)
📸 50MP + 8MP + 2MP Triple Rear Camera
🤳 16MP Selfie Camera
🔋 Massive 10,000mAh Battery
⚡ 45W Fast Charging
💧 IP68 / IP69 Rated#realmeP4Power 🚀 pic.twitter.com/Qreo6L0VX0— Tech Buddies (@TechBuddiesIN) January 18, 2026