தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துதல், செல்களுக்கு ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் எடுத்துச் செல்லுதல், மூட்டு இயக்கத்தை சீராக்குதல், கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற பல முக்கிய பணிகளை தண்ணீர் செய்கிறது. ஆனால், தண்ணீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் குறையுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.