ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லாவில் கடந்த 48 மணி நேரமாக பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு, உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக, பனியால் மூடப்பட்ட ஷிம்லா ரயில் பாதை தற்போது சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்க்கும் அம்சமாக மாறியுள்ளது. பனிப்படர்ந்த ரயில்பாதைகளும், வெண்மை போர்வை போர்த்திய மலைகளின் நடுவே செல்லும் டாய் ட்ரெயின் பயணமும், பார்வையாளர்களுக்கு அரிய மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது.