ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா நகரங்களான மணாலி மற்றும் சிம்லா பகுதிகளில், பனிப்பொழிவு பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். தொடர்ந்து பெய்த பனியால் நகரம் முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. காலை முதல் மாலை வரை பனித்துகள்கள் இடைவிடாமல் பெய்ததால், மலைப்பகுதிகள் முழுவதும் கண்கவர் அழகுடன் மிளிர்ந்தன.