சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலியைப் போல அச்சு அசலாக தோற்றமளிக்கும் இருவர், ஒரே பைக்கில் பயணம் செய்வது காணப்படுகிறது. முதலில் இந்த காட்சியை பார்த்த பலரும், உண்மையிலேயே தோனி, கோலியை பைக்கில் அழைத்துச் செல்கிறாரா என்று நம்பிவிட்டனர்.