அமெரிக்காவை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த மெக்சிகோ.. இந்தியா மீது 50% வரி விதித்தது!
Mexico Imposes 50 Percentage Duty on India | கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த நிலையில், மெக்சிகோ அரசும் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
மெக்சிகோ, டிசம்பர் 12 : அமெரிக்காவை (America) தொடர்ந்து, மெக்சிகோ (Mexico) அரசு இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அரசு இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளது, இந்தியாவின் பல்வேறு துறைகளை மிக கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், மெக்சிகோவும் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மெக்சிகோ அரசு இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமலில் வைத்திருக்கும் அமெரிக்கா
உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதை போல, இந்தியாவும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா அரசி, கோதுமை உள்ளிட்ட பல பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இவ்வாறு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட வர்த்தக வரலாறு உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) கடும் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதையும் படிங்க : 2026-ல் பொங்கலுக்கு ரூ.3,000 பரிசு?.. வெளியான முக்கிய தகவல்!




இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா
அதாவது இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அவர் அறிவித்தார். பின்னர், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதாக கூறி கூடுதலா 25 சதவீதம் வரி விதித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி 50 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு துறைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : லட்சக்கணக்கான EPFO ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3,000!
அமெரிக்காவை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த மெக்சிகோ
அமெரிக்க அரசு இந்தியா மீது விதித்து வரும் 50 சதவீத வரி தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலையில் தான், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மெக்சிகோ அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் செய்யாத இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மெக்சிகோ வரி விதித்துள்ளது. இந்த வரி ஜனவரி 2026-ல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.