Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஞ்சலக RD-ல் ரூ.222 முதலீடு செய்து ரூ.11 லட்சம் பெறலாம்.. முழு விவரம் இதோ!

Post Office Recurring Deposit Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றாக ஆர்டியில் தினமும் ரூ.222 முதலீடு செய்வதன் மூலம் ரூ.11 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக RD-ல் ரூ.222 முதலீடு செய்து ரூ.11 லட்சம் பெறலாம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Dec 2025 11:45 AM IST

பொருளாதாரத்தை பாதுகாக்க அனைவரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை (Post Office Schemes) செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் சிறந்த லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், அஞ்சலக ஆர்டி (RD – Recurring Deposit) திட்டத்தில் தினமும் ரூ.222 முதலீடு செய்வதன் மூலம் ரூ.11 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறந்த பலன்களை கொடுக்கும் அஞ்சலக ஆர்டி திட்டம்

அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் அஞ்சலக ஆர்டி. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் சிறந்த பலன்களை பெற முடியும். அந்த வகையில் ரூ.222 முதலீட்டில் ரூ.11 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : லட்சக்கணக்கான EPFO ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3,000!

தினமும் ரூ.222 முதலீடு செய்து ரூ.11 லட்சம் பெறலாம்

இந்த அஞ்சலக ஆர்டி திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.222 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி மாதத்திற்கு ரூ.6,660 மற்றும் ஆண்டுக்கு ரூ.3,99,600 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், உங்களுக்கு மொத்தமாக ரூ.4,75,297 கிடைக்கும்.

இதையும் படிங்க : Year Ender 2025: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 – அதிரடியாக குறைந்த கார், பைக் விலை

10 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.11 லட்சம்

இதுவே இந்த முதலீட்டை நீங்கள் 10 ஆண்டுகளுக்கு தொடரும் பட்சத்தில் உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தமாக ரூ.11,37,981 கிடைக்கும். பத்து ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.7,99,200 முதலீடு செய்திருப்பீர்கள். அது வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ.11,37,981 ஆக கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தில் வட்டியாக மட்டும் நீங்கள் ரூ.3,38,781 பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.