ஜென்சி தலைமுறையினர் எவ்வாறு பணத்தை செல்வு செய்கின்றனர்?.. சூப்பர் மணி வெளியிட்ட அறிக்கை!
Gen Z's UPI Spending Habits | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் ஜென்சி தலைமுறையினர் தங்களது அன்றாட வாழ்வில் எவ்வாறு பண பரிவர்த்தனை செய்கின்றனர் என்பது தொடர்பாக சூப்பர் மணி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தாற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கையில் பணம் வைத்து பயன்படுத்துவதில்லை. மாறாக அவர்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனையை தேர்வு செய்கின்றனர். மிக விரைவாகவும், சுலபமாகவும் பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது என்பதால் பலரும் அதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், இளைய தலைமுறையினர் பணத்தை எவ்வாறு செலவு செய்கின்றனர் என்பது குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜென்சி தலைமுறையினர் எவ்வாறு பணத்தை பயன்படுத்துகின்றனர்?
தற்போதைய காலக்கட்டத்தில் ஜென்சி தலைமுறையினர் (Gen Z Generation) எவ்வாறு பணத்தை செலவு செய்கின்றனர் என்பது குறித்து சூப்பர் மணி (Super Money) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மில்லியன் கணக்கான யுபிஐ பண பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நகரங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் வாழக்கூடிய 30 வயதுக்குள் உள்ள 72 சதவீத பயனர்களின் பொருளாதார நடவடிக்கைகள் எத்தைய மாற்றத்தை கண்டுள்ளன என்பது குறித்து விளக்குவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.98,000-க்கு விற்பனை!




ஒரு மாதத்திற்கு 200-க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகள்
தற்போதுள்ள இளைய சமூகத்தினருக்கு டிஜிட்டல் பேமெண்ட் முறை என்பது இயல்பான் ஒன்றாக மாறிவிட்டது. அறிக்கையின் படி 74 சதவீத இளைய தலைமுறையினர் ஒரு மாதத்திற்கு குறைந்தது 50 யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும், அதிகபட்சமான 200 யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை மாற்றங்கள் இந்திய இளைஞர்கள் தங்களது பொருளாதாரத்தை கையாளும் முறையை முற்றிலும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு
இரவு நேரத்தில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது
இந்த அறிக்கை ஜென்சி தலைமுறையினரின் பொருளாதார கையாடல் மட்டும்னறி அவர்களின் வாழ்க்கை முறை குறித்த தெளிவான பார்வையையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அதிகாலை 6 மணிக்கு உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது, நள்ளிரவில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது ஆகிய பழக்க வழக்கங்கள் ஜென்சி தலைமுறையினரிடைடே அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் காலை 6 மணி முதல் 11 மணி வரை அதிக அளவிலான பணத்தை யுபிஐ மூலம் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது.