Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Repo Rate: இந்த 2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே நான்கு முறை வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வீட்டு கடன்கள் வெளிப்புற வட்டி அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் விரைவில் இந்த வட்டி குறைப்பை தங்கள் கடன் வட்டிகளில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Dec 2025 14:03 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) கடந்த டிசம்பர் 4, 2025 அன்று பணவியல் கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டியை (Repo Rate) 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25 சதவீதமாக அறிவித்துள்ளது. இந்த 2025 ஆண் ஆண்டில் மட்டும் 4 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 5.5 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது குறைக்கப்பட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டில் இதுவரை செய்யப்பட்ட மொத்த வட்டி குறைப்பு 125 அடிப்படை புள்ளிகளாக உள்ளது. இந்த முடிவு, வீடு வாங்கும் பொதுமக்கள் மற்றும் கடன் பெற்றவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம்

கடந்த டிசம்பர் 3, 4 மற்றும் 5, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதார நிலை, பணவீக்கம், வளர்ச்சி மறஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த வட்டி குறைப்புக்கு ஒப்புதல் வழங்கியதாகவும் அவர் கூறினார்.  ரெப்போ வட்டி குறைப்புடன் சேர்த்து, ஸ்டாண்டிங் டெபாசிட் வசதி  வட்டி 5 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் முறை மற்றும் வங்கி வட்டி 5.5 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தனது நியூட்ரல் கொள்கை நிலைப்பாட்டை மாற்றவில்லை என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.98,000-க்கு விற்பனை!

ரெப்போ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் 6.50 சதவிகிதமாக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7, 2025அன்று 0.25 குறைக்கப்பட்டு 6.25 சதவிகிதமாக இருந்தது. இதனையடுத்து அடுத்த 2 மாதங்களில் மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக மாற்றப்பட்டது. கடைசியாக 5.50 சதவிகிதமாக இருந்த நிலையில், கடந்த டிசம்பர் 4, 2025 அன்று மேலும் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25 ஆக உள்ளது.

மாதத் தவணை குறையுமா?

இந்த வட்டி குறைப்பின் மூலம் முக்கியமான கேள்வி வீட்டுக் கடனுக்காக இஎம்ஐ வசதிகள் உண்மையில் குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கிகள் இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பை தங்களது நடைமுறைக்கு கொண்டு வந்தால், உடனடியாக மாதத் தவணை குறையும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க : EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு

இந்த 2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே நான்கு முறை வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வீட்டு கடன்கள் வெளிப்புற வட்டி அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் விரைவில் இந்த வட்டி குறைப்பை தங்கள் கடன் வட்டிகளில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் மாதங்களில் வீட்டு கடன் மாதத்தவணை உண்மையில் குறையுமா என்பதை வீடு வாங்கியவர்களும், வாங்க திட்டமிடுபவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.