2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
Most Viewed Tamil Movie Trailers In 2025: தமிழ் சினிமாவில் இந்த 2025ல் பல படங்ககள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சில படங்கள் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் இந்த் 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் ட்ரெய்லர் எது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
காந்தா திரைப்படம் (Kaantha) : நடிகர் துல்கர் சல்மானின் (Dulquer Salmaan) நடிப்பிலும், தயாரிப்பிலும் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியான படம்தான் காந்தா. இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani selvaraj) இயக்கியிருந்தார். இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse), சமுத்திரக்கனி, காயத்ரி மற்றும் ராணா உட்பட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே அதீத வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின் இப்படம் நவம்பர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த படம் ஒரு இயக்குநர் மற்றும் நடிகருக்கு இடையே உள்ள ஈகோ பிரச்னை தொடர்பான கதையில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர்தான், 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, அதிக பார்வைகளை கடந்த தமிழ் ட்ரெய்லரில் ஒன்றாக இருக்கிறது. இது வெளியான 2 மாதத்திலே 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?




விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி (Vidaamuyarchi – Good Bad Ugly) :
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் 2025ம் ஆண்டில் 2 படங்ககள் வெளியாகியிருந்தது. அதில் அதிக எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படம் விடாமுயற்சி. இதை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்த நிலையில், கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். 2025ல் அஜித்தின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இது அமைந்த நிலையில், தற்போதுவரை 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இதையும் படிங்க: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
மேலும் அஜித்தின் நடிப்பில் 2வது வெளியான படம் குட் பேட் அக்லி இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, திரிஷாதான் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போதுவரை யூடியூபில் 32 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
மதராஸி திரைப்படம் (Madharaasi):
சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான படம்தான் மதராஸி. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போதுவரை அனைத்து மொழிகளையும் இணைந்து 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
டிராகன் திரைப்படம் (Dragon) :
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் இந்த 2025ல் வெளியான முதல் படம்தான் டிராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, பிரதீப் ரங்ககநாதன் நாயகனாக நடித்திருந்தார். இதில் அவருடன் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். 2025ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியான நிலையில், தற்போதுவரை யூடியூபில் இப்படத்தின் ட்ரெய்லர் 21 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.