Sigma Movie: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
Sigma Film Shooting Wrap: தளபதி விஜய்யின் மகன்தான் ஜேசன் சஞ்சய். இவர் தமிழில் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த நிலையில், அவரின் படமானது பிரம்மாண்டமாக தயாராகிவருகிற்து. அந்த வகையில் இந்த சிக்மா படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் டீசர் எப்போது ரிலீஸ் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்சமாக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் மூத்த மகன்தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தனது தந்தை விஜய்யின் வேட்டைக்காரன் (Vettaikaaran) என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். மேலும் தந்தையை போல சினிமாவில் இவரும் ஆர்வம் கட்டிய நிலையில், நடிகராக இல்லாமல் இயக்குநராக சினிமாவில் நுழைந்துள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் முதல் படம்தான் சிக்மா (Sigma). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 10 மதங்களுக்கும் மேல் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) நடித்துள்ளார் மேலும், நடிகையாக ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) என்ற தெலுங்கு நடிகை நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது எப்போது முடியும் என எதிர்பார்த்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிக்மா படத்தின் ஷூட்டிங் தொடர்பான வீடியோவை பகிர்ந்து, இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த வீடியோவில், ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனின் ஷூட்டிங் ஓவர் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் இதில் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஒரு பேரே வரலாறு… வெளியானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட 2வது பாடல்!
சிக்மா படத்தின் முதல் டீசர் ரிலீஸ் எப்போது :
இந்த சிக்மா படமானது ஒரு பண கொள்ளை தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் காதல், ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் என்று அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். இந்த சிக்மா படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படம் உருவாக தொடங்கி கிட்டத்தட்ட 1 வருடமாகியுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
அதன்படி, சிக்மா படத்தின் டீசர் வரும் 2025 டிசம்பர் 23ம் தேதியில் மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது. மேலும் ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால் மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்மா படத்தின் ஷூட்டிங் ஓவர் மற்றும் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
SIGMA shoot wrapped 🎬✨
Get ready for the Teaser on 23.12.25 at 5 PM.@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @Cinemainmygenes @krishnanvasant… pic.twitter.com/aua7GieWwR— Lyca Productions (@LycaProductions) December 19, 2025
சிக்மா படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த சிக்மா படத்தின் ஷூட்டிங் தற்போதுதான் நிறைவடைந்திருக்கும் நிலையில், வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். அதன்படி, இப்படம் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பையும் டீஸருடன் படக்குழு வெளியிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.