Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Suriya47 Movie Update: தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது மற்றமொழி இயக்குநர்களில் இயக்கத்தில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் ஆவேஷம் பட இயக்குனருடன் இணைந்த படம்தான் சூர்யா47. இப்படத்தில் இந்தியாவிலே முதல் முறையாக சிறப்பான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி படம் உருவாக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
மலையாள சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்தான் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இவரின் இயக்கத்தில் ஆவேஷம் (Aavesham) என்ற படமானது வெளியாகி மிக பிரமாதமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தற்போது நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் உருவாகும் சூர்யா47 (Suriya47) படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்க, சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் (Zhagaram Studios) என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்துவருகிறார். இந்த ஜோடி தமிழில் புறநானுறு படத்தில் இணையவிருந்த நிலையில், அப்படம் கைவிடப்பட்டது. அதனை அடுத்தாக சூர்யா47 படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் இந்தியாவிலே முதல் முறையாக சிறப்பான தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி படம் உருவாகிவருகிறதாம் . அது வேறு ஒன்றுமில்லை, இந்த படமானது “அலெக்சா 265” (Alexa 265 Camera) கேமராவை கொண்டு உருவாகிவரும் முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் சூர்யா47 படம் குறித்த எக்ஸ் பதிவு :
#Suriya47 – The First Indian Film to be shot on Alexa 265 Camera 🎥🎯
Gonna be a technically strong film in Making from JeethuMadhavan❤️🔥 pic.twitter.com/veFp3ZjeQZ
— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2025
இந்த அலெக்சா 265 கேமராவை கொண்டு சூர்யா47 திரைப்படம் உருவாகிவரும் நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹாலிவுட் ரேஞ்சில் சூர்யா47 படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பாராது வருகின்றனர்.
சூர்யா47 படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் :
இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதுவரை பல தமிழ் படங்களில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருந்த நிலையில், சூர்யா47 படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: ஹேப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடிப்பு எப்படி இருக்கும்? இயக்குநர் ஓபன் டாக்
ஆனால் இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் நெகடிவ் கதாபாத்திரத்தை கொண்டு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் நஸ்லென் நடிக்கிறார். மேலும் நடிகர் ஃபகத் ஃ பாசிலும் இதில் நடிக்கிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



