Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ

Tamil songs Most Viewed of 2025: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து வெளியான படங்களி பல பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த ஆண்டு தமிழ் சினிமவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பர்ப்போம்.

2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
பாடல்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Dec 2025 21:24 PM IST

கூலி படத்திலிருந்து மோனிகா பாடல்: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மேலும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கூலி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக இந்தப் படத்தில் வெளியான மோனிகா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலிருந்து கோல்டன் ஸ்பாரோ பாடல்: நடிகர் தனுஷ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் அறிமுக நடிகர் பவினேஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை அனிகா சுரேந்திரன் நடித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் பாடல் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தில் இருந்து கனிமா பாடல்: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் பாடம் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்திலிருந்து வெளியான முத்த மழை பாடல்: இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்திற்காக இசையமைக்கப்பட்டு படத்தில் இடம் பெறாத முத்த மழை பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் பாடல் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Arasan: அரசன் படத்தில் இணைந்தாரா ஆண்ட்ரியா? இன்ஸ்டாகிராம் பதிவால் ஹேப்பியில் ரசிகர்கள்!

டியூட் படத்திலிருந்து வெளியான ஊரும் ப்ளட் பாடல்: அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டியூட். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் பாடல் யூடியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Rukmini Vasanth: சினிமாவின் ஆரம்பத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பது டேஞ்சர்… காந்தாரா படம் குறித்து மனம் திறந்த ருக்மிணி வசந்த்!