நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீரிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ
Actress Nidhhi Agerwal : ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் சமீபத்தில் தி ராஜா சாப் படத்தின் நிகழ்ச்சி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நிதி அகர்வால் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் ரசிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொள்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடந்தாலும் சினிமா தொடர்பான நிகழ்வுகள் நடந்தாலும் அங்கு ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிரபலங்களை பார்ப்பதற்காக ஆர்வம் காட்டுவார்கள். இப்படி இருக்கும் சூழலில் சரியான பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிக்கும் பல வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்த நிகழ்வுகள் ஆண் நடிகர்களுக்கே ஆபத்தாக இருக்கும் நிலையில் பெண் நடிகைகள் இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களின் நிலமை சற்று மோசமானதாகவே இருக்கிறது. அப்படி நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெளியே செல்லும் போது ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது
இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை நிதி அகர்வால் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பூமி மற்றும் கலகத் தலைவன் ஆகியப் படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் தற்போது நடிகை நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ள படம் தி ராஜா சாப்.




நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீரிய ரசிகர்கள்:
இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வால் திரும்பவும் தனது காரின் அருகில் செல்லு போது ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது ரசிகர்கள் அவரிடம் அத்துமீரியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸில் போட்டியாளர்கள் குறித்து புறணி பேசும் அமித், சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் நிதி அகர்வால் வீடியோ:
Absolutely pathetic arrangements by @shreyasgroup. 😡 Zero proper security and zero management plan in place. You need to take responsibility for this mess.
#NiddhiAgerwal pic.twitter.com/FpXmBs3ZNm— Nidhhi Agerwal (@NidhhiAgerwl_FC) December 18, 2025
Also Read… அரசன் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது – விஜய் சேதுபதி