பராசக்தி படத்தினை தியேட்டர் ரிலீஸிற்கு பிறகு எந்த ஓடிடியில் பார்க்கலாம்? வைரலாகும் தகவல்
Parasakthi Movie OTT Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தின் வெளியீடு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஓடிடி வெளியீடு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான மதராஸி படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வசூலில் ரூபாய் 100 கோடிகளை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படமும் 100 கோடி ரூபாய்க்கு மேலாக வசூலித்தது. தொடர்ந்து 100 கோடி வசூலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாதித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் நடித்து வரும் பராசக்தி படமும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார்.
இந்தப் பராசக்தி படம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இது உண்மை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் மாணவர்களாகவும் நடிகர் ரவி மோகன் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்:
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இது இவரது இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றது. இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படம் திரையரங்க வெளியீட்டிற்கு பிறகு ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ஜெயிலரில் தமன்னா.. ஜெயிலர் 2ல் படத்தில் இந்த நடிகை நடனமாடுகிறாரா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Parasakthi Based on Annamalai University Student #Rajendran…👀
The climax of this film will be like this…#RaviMohan Police #SivaKarthikeyan Student #Atharva Student#Sreeleela Student
SivaKarthikeyan Father Role – COP https://t.co/u6obyjB6ei pic.twitter.com/0RlAHuvn67— Movie Tamil (@_MovieTamil) December 16, 2025