Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender: 2025ல் தமிழில் அறிமுகமான புதுமுக நடிகைகள்? முதல் படத்திலே சிறப்பான வரவேற்பை பெற்றவர்கள் லிஸ்ட்!

Actresses Who Debuted In Tamil 2025: மற்ற மொழிகளை ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் மற்றமொழி நடிகைகளுக்கும் நல்ல வரவேற்புகள் கிடைக்கும். அந்த வகையில் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களும் அமைந்துள்ளது. அந்த வகையில் 2025ம் ஆண்டில் அறிமுகமாகி ஹிட் கொடுத்த புதுமுக நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

Year Ender: 2025ல் தமிழில் அறிமுகமான புதுமுக நடிகைகள்? முதல் படத்திலே சிறப்பான வரவேற்பை பெற்றவர்கள் லிஸ்ட்!
2025 ஆம் ஆண்டில் தமிழ் அறிமுக நாயகிகள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 16 Dec 2025 20:10 PM IST

கயாடு லோஹர் (Kayadu Lohar): கடந்த 2021ம் ஆண்டில் வெளியான கன்னட மொழி சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்படடவர் கயாடு லோஹர். இவர் இந்த படத்தை அடுத்து மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துவந்தார். இவருக்கு இந்த மொழி படங்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பை கொடுத்தாலும், மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது தமிழ் சினிமாதான். கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் (Dragon) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இவர் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தார்.

அதில் தமிழ் மக்களிடையே கயாடு லோஹரின் கதாபாத்திரம் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பல்லவி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். இதை அடுத்ததாக இவருக்கு தமிழ் மொழியில் பல படங்கள் குவிந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: 2025ல் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் தெரியுமா? இவர்தான் முதலிடமா?

நடிகை கயாடு லோஹர் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட்ஸ் :

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) :

கடந்த 2019ம் ஆண்டில் வெளியான பீர்பால் டிரையாலஜி என்ற கன்னட மொழி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ருக்மிணி வசந்த். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் அந்த அளவிற்கு பெரியதாக பேசப்படவில்லை. தொடர்ந்து இந்தி மொழியிலும் படங்களில் நடிக தொடங்கியிருந்தார். அந்த வகையில் இவருக்கு தென்னிந்திய மொழிகளில் பிரபலம் கொடுத்த படம்தான் சப்த சாகரதாச்சே எல்லோ. இப்படமானது 2 பாகமாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தக்கதான் இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் வரவேற்புகள் குவிந்தன.

இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன?

அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ஏஸ். நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான இப்படம் பெருமளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும், ருக்மிணி வசந்திற்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அதன் பின் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

மமிதா பைஜூ (Mamitha Baiju) :

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மமிதா பைஜூ. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க தொடங்கி, 2022ம் ஆண்டில் வெளியான சூப்பர் சரண்யா என்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். மேலும் இவருக்கு தென்னிந்திய மக்களிடையே பிரபலத்தை கொடுத்த படம் பிரேமலு. இந்த படத்தை அடுத்ததாக ரெபெல் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். தமிழில் இவருக்கு இது முதல் படமாக இருந்தாலும், அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்த படம் பிரதீப் ரங்கநாதனின் டியூட். இப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரட்சிதா ராம் (Ratchita Ram) :

கடந்த 2025 ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் தமிழில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரட்சிதா ராம். இவர் ஏற்கனவே பல கன்னட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் படமாக கூலி படம் அமைந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் கண்ணன் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.