Year Ender: 2025ல் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் தெரியுமா? இவர்தான் முதலிடமா?
Highest-paid South Indian Actresses: தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் திரைப்படங்களில் நடித்துவருகின்றனர். மேலும் பிரபல நடிகர்கள் சுமார் ரூ 30 கோடிகள் முதல் 200 கோடிகள் வரை ஒரு படத்தில் நடிக்க சம்பளத்தை பெறுகிறார்கள். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 தென்னிந்திய நடிகைகள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan): தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் திரிஷா கிருஷ்ணன். இவர் தனது 42வது வயதிலும் லீட் நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து படங்கள் நடித்துவருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் காட்டிவருகிறார். அந்த வகையில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை திரிஷா முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 பாகத்திற்கு சுமார் ரூ 10 முதல் 12 கோடிகள் வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் இவரின் நடிப்பில் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் விஸ்வம்பரா (Vishwambhara).
இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரூ 12 கோடிகளுக்கு மேல் சம்பளம் வங்கியுள்ளாராம். அந்த வகையில் தென்னிந்திய நடிகைகளில் இவர் முதலிடத்தில் உள்ளார் என கூறப்படுகிறது.




இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன?
நடிகை திரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பதிவு :
View this post on Instagram
நயன்தாரா (Nayanthara) :
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேல் எந்த படங்களும் வெளியாகவில்லை. இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அந்த வகையில் தன்னுடன் வயது அதிகமான நடிகர்களுடன் நடிக்க நடிகை நயன்தாரா தற்போது அதிகம் சம்பளத்தைக் கேட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி இவர் சுமார் ரூ 11 முதல் 12 கோடிகள் வரை சம்பளமாக பெருகிறாராம். அந்த வகையில் இவர் 2வது இடத்தில உள்ளார்.
ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna):
கன்னடம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து , தற்போது பான் இந்தியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தி கேர்ள்ஃபிரண்ட் என்ற படமானது வெளியாகியிருந்தது. இது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இந்தி மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார்.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் முன்னணி நடிகர்களின் சம்பளம் இவ்வளவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
அந்த வகையில் இவர் படத்தின் கதை தொடர்பாக தனது சம்பளத்தை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது. இவரின் காட்சிகள் படம் முழுவதும் அமைந்தால் அதற்கு தனி சம்பளம் என்றும், இவர் இறுதியாக புஷ்பா 2 படத்திற்கு சுமார் ரூ 10 கோடிகளுக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளாராம். இதனால் இவர் 3வது இடத்தில் உள்ளார்.
சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) :
நடிகை சமந்தா ரூத் பிரபு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும் சரி, மற்ற எந்த மொழிகளிலும் சரி பெரியதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரின் நடிப்பில் இறுதியாகே குஷி என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த் படத்தய் அடுத்ததாக கடந்தஹ் 2024ம் ஆண்டில் சீட்டாட்டல் ஹன்னி பன்னி என்ற வெப் தொடர்ந் வெளியாகியிருந்தது. இந்த வெப் தொடரில் நடிகர் வருண் தேவனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த் தொடரில் நடிக்க நடிகை சமந்தா ரூ 10 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் தற்போதும் படங்களிலும் சுமார் ரூ 9 முதல் 10 கோடிகள் கிட்ட சம்பளமாக கேட்டுவருவதாக வட்டாரங்கள் கூறுகிறது. இதன் காரணமாக சமந்தா 4வது இடத்தில் உள்ளார்.
சாய் பல்லவி (Sai Pallavi) :
நடிகை சட்ட பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். ரன்பீர் கபூரின் ராமாயணம் படத்தின் சீதை வேடத்தில் நடித்துவருகிறார். இப்படம் 2 பாகமாக உருவாகும் நிலையில், இந்த இரு பாகங்களுக்கும் சேர்த்து ருமார் ரூ12 கோடிகளை சம்பளமாக வங்கியுள்ளாராம். இதனை அடுத்ததாக ஒப்பந்தமாகவும் படங்களுக்கு சுமார் ரூ 7 முதல் 8 கோடிகள் வரை சம்பளம் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் சாய் பல்லவி 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.