Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் ரிலீஸ் ஆகல- 2025ம் ஆண்டில் வெளியாகாத தமிழ் உச்ச நடிகர்களின் படங்கள்..

Kollywood Anticipated Movies In 2025: தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் பலரும் இருக்கின்றனர். இவர்களின் நடிப்பில் நிச்சயமாக ஆண்டுதோறும் ஒரு படமாவது வெளியாக்குவது வழக்கம். அந்த வகையில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு, 2026ம் ஆண்டிற்கு தள்ளிப்போன படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் ரிலீஸ் ஆகல- 2025ம் ஆண்டில் வெளியாகாத தமிழ் உச்ச நடிகர்களின் படங்கள்..
2025-ல் எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட் திரைப்படங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Dec 2025 22:46 PM IST

ஜன நாயகன் திரைப்படம் : தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ள நிலையில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாக விஜய்யுடன் 2வது முறையாக இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், கடந்த 2025 மே மாதத்துடன் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இந்த படமானது முதலில் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

பின் சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்கு படக்குழு தள்ளிவைத்துவிட்டது. இந்த படமானது விஜய்யின் கடைசி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படத்தில் இது முதல் இடத்தில் இருக்கிறது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: 2025ல் விவாகரத்து அறிவித்த தமிழ் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ!

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

கருப்பு திரைப்படம் (Karuppu) :

கோலிவுட் சினிமாவில் பேமஸ் நடிகர்களில் ஒருவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் இறுதியாக ரெட்ரோ என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படமானது சூர்யாவிற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின் ஒரு வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா45 அதாவது கருப்பு படத்தில் இணைந்து நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியிருந்த நிலையில், இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால பாதியில் நின்றது. பின் சமீபத்தில்தான் முழுமையாக முடிந்தது என்றே கூறலாம். இதன் காரணமாக இப்படம் 2026ம் ஆண்டு தமிழ் புத்தனாடில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சர்தார் 2 திரைப்படம் (Sardar 2):

இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தியின் (Karthi) கூட்டணியில் உருவாகிவந்த படம்தான் சர்தார் 2. இப்படம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான கதையில் தயாராகியுள்ளது. இதில் நடிகர்கள் எஸ்.ஜே.சூரிய, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமும் 2025ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: இது டிசம்பர் மாதமா? இல்ல ஒத்திவைப்பு மாதமா? இந்த மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) :

பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் 2வது உருவாகிவந்த படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இதை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகை க்ரித்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram) :

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டிலே வெளியீட்டிற்கு தயாரான படம்தான் துருவ நட்சத்திரம். இந்த படமானது கடந்த 2015ம் ஆண்டு முதல் மிக பிரம்மாண்டமாக உருவாகிவந்த நிலையில், சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. இந்த படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள நிலையில், விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ரிது வர்மா மற்றும் ராதிகா சரத்குமார் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமும் 2025ம் ஆண்டில் வெளியாகும் என அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.