Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது டிசம்பர் மாதமா? இல்ல ஒத்திவைப்பு மாதமா? இந்த மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

December 2025 Release Delays Movies: 2025ம் ஆண்டின் கடைசி மாதமாக இருப்பது டிசம்பர். அந்த வகையில் இந்த ஒரே மாதத்தில் தமிழ் மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட படங்கள் என்னென்னன்னு தெரியுமா?. படங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இது டிசம்பர் மாதமா? இல்ல ஒத்திவைப்பு மாதமா? இந்த மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?
டிசம்பர் 2025 வெளியீட்டு தாமதங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Dec 2025 12:29 PM IST

வா வாத்தியார் : நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவான படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா (Ganavel Raja) தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இந்த படமானது மிக பிரமாண்டமாக தயாராகிவந்தது. இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணி மக்களிடையே மிகவும் பிரபலமாகாவே பேசப்பட்டுவந்தது. அந்த வகையில் கார்த்தியின் நடிப்பில் 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகவே இது அமைந்திருந்தது. இப்படம் முதலில் கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின் சில காரணமாக 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் கடன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது. இதன் காரணமாக இப்படம் இந்த் 2025 டிசம்பர் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமராக சிறை செல்லும் ரம்யா.. வைரலாகும் புரோமோ!

வா வாத்தியார் பட ஒத்திவைப்பு தொடர்பான பதிவு :

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் :

பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டியின் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமானது பிரதீப் ரங்கநாதனின் 3வது படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மீலாத் தயாராகிவருகியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இது இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரிலீஸ் தேதிக்கு முன் கிட்டத்தட்ட 3 ரிலீஸ் தேதியை அறிவித்து , பின் படக்குழு அதை ஒத்திவைத்திருந்தது. அந்த வகையில் இந்த டிசம்பர் 18ம் தேதியிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போவதாக வட்டாரங்கள் தெரிகிறது.

ரெட்ட தல திரைப்படம் :

நடிகர் அருண் விஜயின் நடிப்பில் 2025ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருந்த படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்க, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் ரெட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகைகள் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இதில் ஜான் விஜய், யோகி சாமி மற்றும் பாலாஜி முருகதாஸ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் முதலில் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பின் சில காரணங்களால வரும் 2025 டிசம்பர் 25ம் தேதிக்கு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி.. அட இந்த படத்திலா?

லாக்டவுன் திரைப்படம் :

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பில் தமிழில் வெளியாக தயாராகிவந்த படம்தான் லாக்டவுன். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படமும் கார்த்தியின் வா வாத்தியார் படத்தைப்போலத்தான், முதலில் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகவிருந்தது. பின் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என்ன படக்குழு அறிவித்தது பின் காலவரையின்றி இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இப்படமும் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.