Vaa Vaathiyaar: வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? சோகத்தில் கார்த்தி ரசிகர்கள்!
Vaa Vaathiyaar Movie Delay: கார்த்தியின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவந்த படம்தான் வா வாத்தியார். இந்த படமானது நாளை 2025 டிசம்பர் 12ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவிருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் கடன் காரணமாக இந்த படத்தின் ரிலீசிற்கு பிரச்சனை எழுந்துவந்து. மேலும் தற்போது இப்படம் ஒத்திவைக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவந்த படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். மேலும் இப்படத்தை தமிழ் பேமஸ் இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை தொடர்பான கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இணைத்த படத்தை ஸ்டூடியோஸ் க்ரீன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா (Ganavel Raja) தயாரித்துவந்தார். இந்நிலையில் இவர் பிரபல தொழிலதிபரான அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் கடனாக பல கொடிகளை பெற்றுள்ளார். இதை வட்டியுடன் ரூ 21.76 கோடிகளை அவருக்கு வழங்கவேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றம் (Chennai High Court) உத்தரவிட்டது.
இதை கொடுக்காவிட்டால், வா வாத்தியார் படத்தை வெளியிட அனுமதிக்கமுடியாது என கூறியுள்ளது. மேலும் இன்னும் அந்த கடனை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக இந்த வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து படக்குழு எந்த அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: மெய்யழகன் படத்திற்காக பிரேம் குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபமாக இல்லை – நடிகர் கார்த்தி
வா வாத்தியார் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#VaaVaathiyaar Releasing In Cinemas Soon pic.twitter.com/3rmCa6vDwF
— Studio Green (@StudioGreen2) December 11, 2025
வா வாத்தியார் படத்தின் தற்போதைய நிலை :
இந்த வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி 2025 டிசம்பர் 12ம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் இந்த படத்தின் ரிலீசிற்கு 1 நாள் கூட இல்லை. ஆனால் தற்போதுவரையிலும் இப்படத்தின் ப்ரீ- புக்கிங் தொடங்கவில்லை. இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பது குறிதான் தகவல் உண்மை என தெரிகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தடைசெய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதுகுறித்தான தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
மேலும் இப்படத்தின் டிக்கெட் புக்கிங் மற்றும் எந்த திரையரங்குகளிலும் இதற்கான காட்சிகள் தொடர்பான எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கார்த்தியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.