மெய்யழகன் படத்திற்காக பிரேம் குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபமாக இல்லை – நடிகர் கார்த்தி
Karthi About Meiyazhagan Movie Issue: நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் கார்த்தி தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில் மெய்யழகன் படம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் தான் நடிகர் கார்த்தி. இவர் சினிமாவில் முன்னதாக இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ஒரு விழாவில் கார்த்தியைப் பார்த்த இயக்குநர் அமீர் அவரது பருத்திவீரன் படத்திற்கு இவதான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று அவரிடம் பேசிய நடிக்க வைத்தார். அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பருத்திவீரன் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படத்திலேயே கிராமத்து இளைஞனாக நடித்த கார்த்தி அடுத்து பையா படத்தில் ஸ்டைலிஷ் சிட்டி பையனாக கலக்கி இருப்பார். இவர் கிராமத்து இளைஞன் கேரக்டருக்காக மட்டும் இல்லாமல் சிட்டி நாயகனாகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி பலப் படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதில் நடிகர் கார்த்தி மெய்யழகன் படம் குறித்தும் இயக்குநர் பிரேம் குமார் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.




இயக்குநர் பிரேம் குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபமாக இல்லை:
அதில் நடிகர் கார்த்தி பேசியதாவது, என் இயக்குநர் பிரேம்குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபப்படவில்லை, மாறாகப் படத்தை கெடுத்த முதிர்ச்சியற்ற தமிழ் யூடியூபர்கள் மீதுதான் கோபப்பட்டார். மெய்யழகன் திரைப்படம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும், அது இது போன்ற மேலும் பல படங்களைத் தயாரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் என்றும் கார்த்தி பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
Also Read… விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் வெளியிட்ட படக்குழு!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Karthi about Meiyazhagan:
“My director PremKumar was not angry on Tamil Audiences, but on the immature Tamil Youtubers who spoiled the film. #Meiyazhagan deserved a bigger success which would encourage makers to produce more movies as such” pic.twitter.com/WjZbgNLvY9
— AmuthaBharathi (@CinemaWithAB) December 11, 2025
Also Read… ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் கிச்சா சுதீப்பின் மார்க் பட ட்ரெய்லர்!