அஜித் சார் அந்த பாடலை எழுதியபோது என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினார் – பாடலாசிரியர் விவேகா
Lyricist Viveka: தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் பாடலசிரியர் விவேகா. இவரது வரிகளில் வெளியான பாடல்கள் பல ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் தன்னை வெகுவாகப் பாராட்டிய பாடல் குறித்து விவேகா சமீபத்தில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியராக வலம் வருகிறார் பாடலாசிரியர் விவேகா. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நீ வருவாய் என. இந்தப் படத்தினை இயக்குநர் ராஜகுமரன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றும் பிடிச்சிருக்கா? என்ற பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் பாடலை எழுதியதி பாடலாசிரியர் விவேகாதான். இதன் மூலமாகவே விவேகா வெள்ளித்திரையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து பல நூறு படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். இவரது வரியில் வெளியான பாடல்கள் பல ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மற்றும் இன்றி மற்ற மொழிகளிலும் தொடர்ந்து பாடல்களை எழுதி வருகிறார் பாடலாசிரியர் விவேகா. இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகரக்ளிடையே வைரலாகி வருகின்றது.
ஷாலினி அஜித் குமாரின் ரிங்டோன் இதுதான்:
அதன்படி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கும் நடிகர் அஜித் குமாருக்கு இடையே நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவேக பேசியுள்ளார். அதன்படி நடிகர் அஜித் குமார் நடிபில் வெளியான வீரம் படத்தில் மட்டும் மூன்று பாடல்களை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா.




Also Read… பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே மீது புகாரளித்த பார்வதி… என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அதில் ரத கஜ துராக என்ற பாடலை எழுதிய பிறகு அஜித்குமார் வந்து தன்னை கட்டியணைத்து அந்தப் பாடல் சிறப்பாக உள்ளது என்று பாராட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் அவரது செல்போனில் ரிங்டோனாக அந்தப் பாடலைதான் வைத்துள்ளார் என்று தெரிவித்ததாகவும் விவேகா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்… என்ன நடந்தது?