Ajith Kumar: மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்.. செல்லமாக ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் குமார்!
Ajith Kumar Gently Warns Fans: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர் அஜித் குமார். இவர் சமீபத்தில் மலேசியாவில் நடந்த 24H கார் ரேஸில் இந்தியாவின் சார்பாக தனது அணியுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் அந்த போட்டியின்போது, தனது ரசிகர்களுக்கு அவர் அட்வைஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith kumar). இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bag Ugly). இந்த படமானது கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மதத்திலே அஜித் முடித்த நிலையில், அதை தொடர்ந்து கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், இதுவரை இவர் கிட்டத்தட்ட 4 கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றியை கைப்பற்றியிருக்கிறார். இவர் தனது அணியின் லோகோவை, இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக, இந்தியாவின் சார்பாக தனது அணியுடன் பல்வேறு நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் (Malaysia) நடைபெற்ற 24H ஹ்ரிவென்டிக் தொடரில் (24H Hriventik Series) கலந்துகொண்டிருந்தனர். இந்த போட்டியில் அஜித்தின் அணி 4வது இடத்தை பிடித்திருந்தது. இந்நிகழ்ச்சியின்போது நடிகர் அஜித் குமார், ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க: நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை.. 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!
மலேசிய கார் ரேஸின் போது ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன அஜித் :
அந்த ரேஸின்போது பேசிய நடிகர் அஜித் குமார், ” தயவுசெய்து மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என் நற்பெயரை மட்டுமல்ல, எங்கள் நற்பெயரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. தயவுசெய்து நீங்கள் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இதை அனைவரிடமும் சொல்லிப் புரியாவையுங்கள். மேலும் கூறுகிறேன் மற்ற அணியினரை தொந்தரவு செய்யும் விதத்தில் நடந்துகொள்ளாதீர்கள்” என ரசிகர்களுக்கு செல்லமாக அட்வைஸ் கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் டி54 திரைப்படம்… சூரஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட போஸ்ட் வைரல்!
ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் நடிகர் அஜித் பேசிய வீடியோ பதிவு :
#Ajithkumar‘s Request to Fans 🌟:
“Please Don’t Disturb the other teams.. It’s not only my reputation.. It’s all of our reputation at stake.. Please behave yourselves.. I want you tell everyone..”🤝pic.twitter.com/7TAKgOZ64q
— Laxmi Kanth (@iammoviebuff007) December 8, 2025
நடிகர் அஜித் குமார் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆசியா மேன்ஸ் லீ என்ற கார் ரேஸ் சீரிஸில் கலந்துகொள்ளவுள்ளார். இது இவர் கலந்துகொள்ளும் மிக பிரம்மாண்ட போட்டியாகும். இதில் இவருடன் தமிழக கார் ரேஸரான கார்த்திகேயனும் கலந்துகொள்கிறார். இந்த போட்டியை முடித்தவுடன் வரும் 2026 ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் AK64 படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.