Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒன்னு ரெண்டு இல்ல.. மொத்தம் 500.. தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித் குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Ajith Viral Video: தமிழ் சினிமாவில் பேமஸ் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் சினிமாவில் நடிகராக நடிக்க தொடங்கி தற்போது கார் ரேஸராகவும் இருக்கிறார். இந்நிலையில் மலேசியாவில் கார் ரேஸ் போட்டியில் இவர் கலந்துகொள்ள உள்ள நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒன்னு ரெண்டு இல்ல.. மொத்தம் 500.. தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித் குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அஜித் குமார்
Barath Murugan
Barath Murugan | Published: 06 Dec 2025 18:36 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith kumar) தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருகிறார். இவர் சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில், இதுவரை இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 63 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் 64வது படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் அதுவும் முடிவடையும் என கூறப்படுகிறது. குட் பேட் அக்லி (Good bad Ugly) படத்தை அடுத்ததாக இப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் (Adhik Ravichandran) இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அஜித் குமார் கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்றுவருகிறார். இவர் மலேசியாவில் (Malaysia) நடைபெறவுள்ள 24H கார் ரேஸ் சீரிஸ் போட்டியில், தனது அணியுடன் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் அதற்கான பயிற்சிகளை அஜித்தின் அணி மேற்கொண்டுவருகிறது. இணையத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்த காட்சிகள் இருக்கிறது.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் பதிவு

அஜித் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ பதிவு :

இந்த வீடியோவின் தொடக்கத்தில் அஜித் குமார் இரு குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. பின் அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு கிட்டத்தட்ட 500 ரசிகர்கள், வரிசையில் காத்திருப்பது போன்று இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அவர் வரிசையில் நின்ற அனைத்து ரசிகர்களிடமும் புகைப்படம் எடுத்துள்ள நிலையில், ரசிகர்களிடையே இந்த வீடியோ வைரலாகிவருகின்றது. மேலும் அஜித்தின் ரசிகர்களிடையே அவர் மேலும் மரியாதை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

அஜித் குமாரின் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட் :

அஜித்தின் 64வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த படமானது ஒரு ஹார்பர் கொள்ளை தொடர்பான கதைக்களத்தில் உள்ளதாம்.

இதையும் படிங்க: நேரம் வரும்போது தெரிவிப்போம்.. தனது திருமணம் குறித்து மனம்திறந்த ராஷ்மிகா மந்தனா!

அஜித் தற்போது கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக பங்குபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஷூட்டிங்கில் இணைவார் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்வாசிகா மற்றும் தெலுங்கு பிரபலம் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்களாம். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்புக்களை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.