Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth: பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு.. அட இந்த படத்திற்காகவா?

Thalaivar 173: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் புது படத்தில் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த படத்திற்காக ரஜினி ஒரு முடிவு எடுக்கவுள்ளாராம்.

Rajinikanth: பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு.. அட இந்த படத்திற்காகவா?
ரஜினிகாந்த் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Dec 2025 18:11 PM IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). கடந்த 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் இந்த படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், ஆமிர்கான் மற்றும் சௌபின் ஷாகிர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்ததாக தற்போது நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் பார்ட் 2 (Jailer 2) படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் 173வது படத்தை சுந்தர் சி (Sundar C) இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், பின் அந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். இந்த காரணத்தால் ரஜினிகாந்தி 173வது படத்தை யார் இயக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் அந்த முடிவை எடுக்கவுள்ளாராம். அது வேறு எதுவும் இல்லை, இந்த தலைவர்173 படத்திற்காக ரஜினிகாந்த் க்ளீன் ஷேவ் (Clean shave) பண்ணபோகிறாராம். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்

தலைவர் 173 திரைப்படம் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு :

தலைவர்173 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது :

ரஜினிகாந்த் விரைவில் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கை முடிக்கவுள்ளாராம். இந்த படத்தைத் தொடந்து சில வாரங்கள் ஓய்விற்கு பின், தலைவர் 173 படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். மேலும் இந்த படத்திற்கு இளம் இசைமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை… ஓபனாக பேசிய கீர்த்தி ஷெட்டி

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணி குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் சூப்பர் ஸ்டாரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதே தேதியில் ஜெயிலர் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.