சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படையப்பா படம்
Padayappa Movie Re Release: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் படையப்பா. அந்தப் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் இவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்களும் திரையுலகினரும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் நடைப்பெற்ற திரைப்பட திருவிழாவில் அரசு சார்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்களுக் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்திற்கு இன்னும் சில நாட்களில் 75-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் முன்னதாக சூப்பர் ஹிட் அடித்தப் படங்களைத் தற்போது ரீ ரிலீஸ் செய்ய படக்குழு தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றது.
அந்த வகையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படையப்பா படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆக்ஷன் ஃபேமிலி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் கடந்த 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை சௌந்தர்யா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சித்தாரா, லட்சுமி, ராதா ரவி, மணிவண்ணன், நாசர், அப்பாஸ், செந்தில், ப்ரீதா, அனிதா வெங்கட், ரமேஷ் கண்ணா, அனு மோகன், வடிவுக்கரசி, சத்தியப்ரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




ரீ ரிலீஸாகும் ரஜினிகாந்தின் படையப்பா படம்:
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் விதமாகவும் நடிகர் ரஜினிகாந்திற்கு வருகின்ற 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு 75-வது பிறந்த நாள் வரவுள்ள நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாகவும் படையப்பா படத்தை மீண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
Also Read… பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்? வைரலாகும் தகவல்
சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Celebrating 50 years of our Thalaivar’s unmatched supremacy 🔥🔥
A journey of pure style, swagger, and timeless stardom ❤️❤️❤️❤️As the world celebrates our #Thalaivar @rajinikanth… my dearest appa ❤️❤️❤️❤️✨✨✨✨
We are proud to bring back the phenomenon #Padayappa, returning… pic.twitter.com/ujCBnNvxkr— soundarya rajnikanth (@soundaryaarajni) December 6, 2025
Also Read… உலக அளவில் வசூலி கெத்துகாட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன் படம் – அப்டேட் இதோ