AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்ப்பதற்காவே நிறைய கூட்டம் கூடும் – நடிகை பிரியங்கா சோப்ரா!

Priyanka Chopra Recalls About Thalapathy Vijay's Craze Fans: பாலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா நடிகர் விஜய் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்ப்பதற்காவே நிறைய கூட்டம் கூடும் – நடிகை பிரியங்கா சோப்ரா!
விஜய் மற்றும் பிரியங்கா சோப்ராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Mar 2026 17:11 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தமிழன். இயக்குநர் அப்துல் மாஜித் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்த தமிழன் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்து இருந்தார். இந்த தமிழன் படம் தான் நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம். மேலும் தமிழில் அவர் நடித்த முதலும் கடைசியுமான படம் ஆகும். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நாசர், ரேவதி, விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, சாருஹாசன், பூர்ணம் விஸ்வநாதன், வினு சக்கரவர்த்தி, டெல்லி கணேஷ், வின்சென்ட் ராய், வாசு விக்ரம், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான் போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் மற்றும் விஜயின் ரசிகர்கள் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்ப்பதற்காவே நிறைய கூட்டம் கூடும்:

அந்த நேரத்தில் நடிகர் விஜயை ஒரு முறை பார்க்க படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய கூட்டம் கூடும் என்பதை பிரியங்கா நினைவு கூர்ந்தார். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, ​​அவரைப் பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு நின்றார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர் நடனமாடியும் நடித்துக் கொண்டிருந்தபோது, ​​நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். இது எனது முதல் படம், திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. திரையரங்குகளில் நாம் பார்ப்பதை மட்டுமே நான் பார்த்தேன் என்று அவர் கூறினார். பிரியங்கா மேலும் கூறுகையில், அது என்ன ஒரு தெய்வீக உணர்வு என்று நான் நினைத்தேன். குறிப்பாக இந்தியாவில், மக்கள் திரைப்படங்களை விரும்புகிறார்கள், ரசிகர்கள் நம்பமுடியாத அளவிற்கு அன்பை வழங்குகிறார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

Also Read… Happy Raj Movie: ‘துரு துரு’.. வெளியானது ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் பட செகண்ட் சிங்கிள்!

இணையத்தில் வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பேச்சு:

Also Read… சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சித்தாரே ஜமீன் பர் படத்தின் ஓடிடி உரிமையை விற்றார் அமீர் கான்

Follow Us