Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்

The Pet Detective Movie: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தி பெட் டிடெக்டிவ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போப்து ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்
தி பெட் டிடெக்டிவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Dec 2025 23:30 PM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஷரஃப் யூ தீன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ஷரஃப் யூ தீன். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது நைப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இறுதியாக இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் தி பெட் டிடெக்டிவ்.

கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் மலையாள சினிமாவில் வெளியானது. ஆக்‌ஷன் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பிரனீஸ் விஜயன் எழுதி இயக்கி இருந்தார். இவருடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை ஜெய் விஷ்ணு இணைந்து எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஷரஃப் யூ தீன் உடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், வினய் கோட்டை, விநாயகன், விஜயராகவன், ஷியாம் மோகன், ஜோமன் ஜோதிர், அமித் மோகன் ராஜேஸ்வரி, பகத் மானுவல், ரெஞ்சி பணிக்கர், ஷோபி திலகன், நிஷாந்த் சாகர், பி.பி. குன்கிகிருஷ்ணன், ஜெய் விஷ்ணு, பிரசீதா மேனன், சஞ்சு மது, ஜெகதீஷ் குமார், சன்னி வெய்ன், மாலா பார்வதி, மேஜர் ரவி, ஜினு ஜோசப், அல்தாப் சலீம், அமி வாக், நிலின் சாண்ட்ரா, பிரசாந்த் மாதவன், சோனம் சிங் ஆகியோர் இணைந்து நடித்தனர்.

தி பெட் டிடெக்டிவ் படத்தின் கதை என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்:

நீண்ட நாட்கலாக அனுபமாவை காதலித்து வந்த ஷராஃப் யூ தீன் அவரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது தந்தையின் வேலையான டிடெக்டிவ் வேலையை தேர்வு செய்கிறார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் அதில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாய் காணாமல் போக அதனை அவர் எதிர்பாராதவிதமாக கண்டுபிடித்துக்கொடுக்கிறார்.

Also Read… ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்‌ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்

இதனைத் தொடர்ந்து அவர் பெட் டிடெக்டிவாக தன்னை மாற்றிக்கொண்டு செயல்படுகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஒரு குழந்தை காணாமல் போக அந்த குழந்தையை தேடும் போது பல எதிர்பாராத உண்மைகள் தெரியவருகிறது. காமெடி ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்த படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படையப்பா படம்