Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திலீப் தலையில் இடியை இறக்கிய கேரள நடிகைகள்.. விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!

Kerala Actress Assualt Case Verdict: பாலியல் வழக்கில் தன்னை சிக்கவைத்து, தனது திரைத்துறை பயணத்தை அழித்து விட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், வழக்கு நடத்திய, ஆறுதலாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

திலீப் தலையில் இடியை இறக்கிய கேரள நடிகைகள்.. விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!
நடிகர் திலீப்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Dec 2025 13:43 PM IST

கேரளா, டிசம்பர் 08: பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், நடிகர் திலீப்பை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நடிகர் திலீப் 8வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம், நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்

திரைப்பயணத்தை அழித்துவிட்டதாக திலீப் வேதனை:

தீர்ப்பை கேட்க திலீப் உட்பட பத்து குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில், தான் விடுதலை செய்யப்பட்டதை கேட்டு திலீப் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வழக்கில் தன்னை சிக்கவைத்து, தனது திரைத்துறை பயணத்தை அழித்து விட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், வழக்கு நடத்திய, ஆறுதலாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்கள் கூட நீடிக்காத திலீப் மகிழ்ச்சி:

தீர்ப்பு வந்து சில நிமிடங்களில், மகிழ்ச்சியாக இருந்த திலீப் தலையில் இடியை இறக்குவது போல், அவரது விடுதலையை எதிர்த்து நடிகைகள் கூட்டமைப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. குற்ற வழக்குகளில் இருந்து அதிகாரமிக்க நபர்கள் விடுதலை ஆவது வாடிக்கையாகிவிட்டது என்றும் நடிகைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு 84 நாட்கள் திலீப் சிறையில் இருந்த நிலையில், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, முன்னணி மலையாள நடிகைகள் பலரும் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், #Avalkkoppam என்று நடிகைகள் பார்வதி திருவோத்து, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவருடன் துணை நிற்கிறோம் (With her) என்று பலரும் குரல் எழுப்பி  வருகின்றனர்.

இதையும் படிங்க: சூர்யா47 படத்துக்காக புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா!

ஏ1 முதல் ஏ6 வரை 6 பேரும் குற்றவாளிகள்:

இவ்வழக்கில் பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஸ், சலீம், பரதீப் ஆகிய 6 பேரும் குற்றாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றாவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் டிசம்பர் 12ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.