Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kalam Kaval: குற்றப் புலனாய்வு கதையில்… மம்முட்டி – விநாயகனின் கலம் காவல் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

Kalam Kaval Movie Review: மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் மம்முட்டி. இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 5ம் தேதியில் இவரின் நடிப்பில் வெளியான படம்தான் கலம் காவல். இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Kalam Kaval: குற்றப் புலனாய்வு கதையில்… மம்முட்டி – விநாயகனின் கலம் காவல் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
கலம் காவல் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Dec 2025 13:53 PM IST

தென்னிந்திய சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை கொடுத்து, பார்ப்பவர்களை மிரளவைக்கும் சினிமாவாக மலையாளம் சினிமா (Malayalam Cinema) இருந்துவருகிறது. அந்த வகையில் நடிகர் மம்முட்டியின் (Mammooty) நடிப்பில் வெளியாகும் படங்களின் கதையும் மிகவும் வித்தியாசமாக இருந்துவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக பசூகா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மம்முட்டி சிறப்பான வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் 2வது வெளியாகியுள்ள படம்தான் கலம் காவல் (Kalam Kaval). இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்தின் கே. ஜோஸ் (Jithin K. Jose) இயக்கியுள்ள நிலையில், மம்முட்டி மற்றும் நடிகர் விநாயகன் (Vinayakan) இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள குற்றம் புலனாய்வு கதைக்களத்தில் (Crime investigation) இப்படம் தயாராகியுள்ளது.

மேலும் இதில் நடிகர்கள் கிபின் கோபிநாத், ராஜீஷா விஜய, மற்றும் ஸ்ருதி ராமச்சந்திரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் விறுவிறுப்பான திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் இன்று 2025 டிசம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை.. ரசிகர்களை குஷிப்படுத்திய வா வாத்தியார் படக்குழு!

கலம் காவல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள்:

இப்படத்தின் முதல் பாதி மெதுவாக தொடங்கினானும், சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இதில் விநாயகன் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ள நிலையில், மம்முட்டி இப்படத்தில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பும் சிறப்பாகவே வந்துள்ளது. விநாயகனின் புலனாய்வு பகுதிகளை விட, மம்மூட்டியின் பகுதிகள் இதை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. மேலும் இது போன்ற தொடர்ச்சியில் 2வது பாதியும் அமைந்துள்ளது.

நடிப்பில் உச்சத்தில் நடிகர் மம்முட்டி :

இந்த கலம் காவல் படத்தில் நடிகர் மம்முட்டி வில்லன் வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. ஒரு வில்லனுக்கே எடுப்பான அவரின் நடிப்பு சிறப்பாகவே வந்துள்ளது. இந்த படத்தில் ஒரு கடைசியில் அவர் புகைபிடிப்பது போன்று இருந்தது, அந்த கடைசிக்கு திரையரங்கமே வரை உண்மையான சைக்கோ கொலையாளின் என நம்பும் அளவிற்கு இருந்தது என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தளபதி விஜயை தொடர்ந்து மகன் செய்யும் சிறப்பான சம்பவம்!

மொத்தத்தில் இந்த கலம் காவல் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:

இந்த கலம் காவல் படமானது முற்றிலும் குற்றம் புலனாய்வு மற்றும் அதை சுற்றி நடக்கும் மர்மங்கள் தொடர்பான கதையில் உருவாகியுள்ளது. விறுவிறுப்பான மற்றும் குற்றம் திரில்லர் பார்க்கவிரும்பும் ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கவேண்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு 5-க்கு 3.5புள்ளிகள் கொடுக்கலாம்.