Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AR. Rahman: அனிருத் என்னை காபாத்திட்டியானு பாக்குறாரு.. மேடையில் கலகலப்பாக பேசிய ஏ.ஆர். ரஹ்மான்!

AR Rahman About Anirudh: பான் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் பிரபுதேவாவின் மூன் வாக் என்ற படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து மேடையில் பேசிய இவர், அனிருத் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

AR. Rahman: அனிருத் என்னை காபாத்திட்டியானு பாக்குறாரு.. மேடையில் கலகலப்பாக பேசிய ஏ.ஆர். ரஹ்மான்!
ஆர் ரஹ்மான் மற்றும் அனிருத்
Barath Murugan
Barath Murugan | Published: 04 Dec 2025 22:54 PM IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R. Rahman). இவரை ரசிகர்களை இசைப்புயல் என அன்போடு அழைத்துவருகிறார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக இருந்துவரும் இவர், தமிழ் மொழியை கடந்த தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அந்த காலத்திலே பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்து பான் இந்தியா அளவிள் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவந்தார். மேலும் இவர் தற்போது நடிகர் ராம் சரணின் (Ram Charan) நடிப்பில் பிரம்மாண்ட படமான பெடி (Peddi) மற்றும் நடிகர் பிரபு தேவாவின் (Prabhu Deva) மூன் வாக் (Moon Walk) போன்ற படங்ககளுக்கும் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மமூன் வாக் படக்குழுவுடன் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்டார்.

அதில் மேடையில் இந்த மூன் வாக் படத்தின் 5 பாடல்களையும் இவரே பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை இந்தத் படங்களிலும் தொடர்ந்து நடித்து 5 பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் (Anirudh) பற்றியும் மேடையில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கார்த்தியின் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை.. அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்- என்ன காரணம் தெரியுமா?

அனிருத் குறித்து மேடையில் கலகலப்பாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் :

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இதுவரை எந்த படங்களிலுமே நீங்கள் 5 பாடல்களை பாடியதில்லை, இந்த மூன் வாக் படத்தில் மட்டும் எப்படி நீங்க 5 பாடலை பாடுனீங்க என கேள்வி எழுப்பினார். உடனே ஏ.ஆர். ரஹ்மான், “அனிருத் என்னை பார்த்துக்கொண்டே இருக்காரு, என்னை காபாத்திட்டியானு. ஒரு படத்தில் நாம் மட்டுமே பாடல் பாடும்போது மக்கள் நினைப்பார்கள் ஏன் இவர் பாடுகிறார் என்று. மேலும் ஒரு இசையமைப்பாளராக எனக்கு ஒரு கடமை இருக்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? கம்ருதீனால் தொடரும் பிரச்னை… FJ-யிடம் கண்ணீருடன் சண்டையிட்ட பார்வதி!

இந்த பாடலை யார் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று, அதையெல்லாம் மூன் வாக் பட தயாரிப்பாளரிடம் சொல்லிப்பார்த்தேன். அவர் அனைத்தயும் கேட்டுவிட்டு, அதெல்லாம் தேவையில்லை எல்லா பாடல்களையும் நீங்களே பாடுங்கள் என கூறிவிட்டார். அதனால் இந்த படத்தில் பாடல்களை நான் படியிருந்தேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

மூன் வாக் பட பாடல்கள் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் பேசிய வீடியோ பதிவு :

மூன் வாக் திரைப்படம் :

நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவாவின் நடிப்பில் உருவாகிவரும் படம்தான் மூன் வாக். இந்த படத்தை இயக்குநர் மனோஜ் என்.எஸ். இயக்கிவருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மொட்டை ராஜேந்திரன் என பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இப்படம் முழுவதும் காமெடி கதைக்களத்தில் உருவாகிவரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இப்படம் வரும் 2026ம் ஆனதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.