AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மான்யவர் மோஹே விளம்பரத்தில் விஜய் தேவர்கொண்டா – ரஷ்மிகா ஜோடி.. 3 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை..

Vijay Devarkonda - Rashmika Mandanna: இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களுக்குள், ரஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா இணைந்து இருக்கும் புகைப்படம் Instagram-ல் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதேபோல் சுமார் 8 மில்லியன் organic லைக்குகளும் பதிவாகியுள்ளன.

மான்யவர் மோஹே விளம்பரத்தில் விஜய் தேவர்கொண்டா – ரஷ்மிகா ஜோடி.. 3 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Mar 2026 18:29 PM IST

மார்ச் 9, 2026: பிரபல எத்னிக் உடை பிராண்டான Manyavar Mohey சமீபத்தில் ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. வரவிருக்கும் திருமண சீசனை முன்னிட்டு, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கிய நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இந்த பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. “Rashmika & Vijay – Made For Each Other” என்ற பெயரில் Prachar Communication நிறுவனம் உருவாக்கிய இந்த விளம்பர பிரச்சாரம் தற்போது டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா புகைப்படம்:

இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களுக்குள், ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா இணைந்து இருக்கும் புகைப்படம் Instagram-ல் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதேபோல் சுமார் 8 மில்லியன் organic லைக்குகளும் பதிவாகியுள்ளன.

மற்ற சமூக வலைதளங்களையும் சேர்த்து பார்க்கும்போது, இதுவரை 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளதுடன், 250 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை சென்றடைந்துள்ளது.

மேலும், இந்த பதிவின் ஈடுபாட்டைப் பொறுத்தவரை:

  • 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பகிர்வுகள் (Shares)

  • 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Reposts

  • 29,500க்கும் மேற்பட்ட கருத்துகள் (Comments)

பதிவாகியுள்ளதாக Prachar Communication நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ப்ரச்சார் கம்யூனிகேஷன்ஸ் கூறிய முக்கிய தகவல்:

தற்போது இந்த “Rashmika & Vijay – Made For Each Other” பிரச்சாரம் டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இதை திரையரங்குகள், அச்சு ஊடகங்கள், மற்றும் வெளிப்புற விளம்பர ஊடகங்கள் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், Prachar Communication நிறுவனத்தின் இயக்குநர் ரக்ஷித் ஜெயின் கூறுகையில்,
“வெறும் மூன்று நாட்களுக்குள் இத்தகைய பிரச்சாரத்தை திட்டமிட்டு நிறைவு செய்ததும், அதற்கு கிடைத்த அசாதாரணமான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. Manyavar நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாக இருக்கும் எங்கள் உறவினால் இந்த திட்டத்தை மிக விரைவாக நிறைவு செய்ய முடிந்தது. மேலும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தன்னா ஜோடிக்கு கிடைத்த வரவேற்பு எங்கள் எதிர்பார்ப்பை விட மிகவும் அதிகமாக உள்ளது” என்றார்.

இதேவேளை, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கூறுகையில், Manyavar Mohey பிராண்டு திருமணத்தை உணர்ச்சிகளுடன் வெளிப்படுத்தும் விதம் மிகவும் தனித்துவமானது. இந்த திருமண கலெக்ஷனில் உள்ள உடைகள் அழகாக இருப்பதோடு, சிறந்த கைவினைத் திறமையையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த பிரச்சாரத்தின் கருத்து, இசை, மற்றும் உடை வடிவமைப்புகள் அனைத்தும் சேர்ந்து நவீனத்தன்மையும் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்துகின்றன என்று தெரிவித்தனர்.

Follow Us