Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வித்தியாசமான முறையில் நடந்த இந்தவார நாமினேஷன்.. வைரலாகும் புரோமோ!

Bigg Boss Tamil 10th Week Nomination: கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 9 வாரங்களை கடந்துள்ளது. இந்நிலையில் 10வது வாரத்திற்கான நாமினேஷன் இன்று வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புரோமோ வைரலாகி வருகிறது.

வித்தியாசமான முறையில் நடந்த இந்தவார நாமினேஷன்.. வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 9
Barath Murugan
Barath Murugan | Published: 08 Dec 2025 11:40 AM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சின்னத்திரையில் தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், கிட்ட்டத்தட்ட 9 வரத்தை நிறைவு செய்துள்ளது. மேலும் 9வது வாரத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 9 வீட்டிலிருந்து பிரஜின் (Prajin) வெளியேரினார். இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் வீட்டில் மொத்தமாக 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். நேற்று 2025 டிசம்பர் 7ம் தேதியில் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியிலிருந்து பிரஜின் வெளியேரிய நிலையில், அவரின் மனைவியும், பிக் பாஸ் போட்டியாளருமான சாண்ட்ரா கதறியழுத்திருந்தார். மேலும் அவருடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவும் முயற்சி செய்திருந்தார்.

பின் மற்ற போட்டியாளர்களால் மீண்டும் அவர் உள்ளே இழுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 10வது வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்க் இன்று வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பிரபல கோலிவுட் நாயகனின் மகள்.. தற்போது தெலுங்கு பிரபலம்.. இந்த சிறுமி யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 64வது நாளின் முதல் புரோமோ வீடியோ பதிவு :

மற்ற சீசன்களில் இல்லாதது போன்று, இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் மீது பல விமர்சனங்கள் வந்தது என்றே கூறலாம். அப்படியிருந்து பல கட்டுப்பாட்டின் காரணமாக இந்த நிகழ்ச்சியானது தற்போது வரை நடைபெற்று வருகிறது. 9வது வாரத்தில் பிரஜின் வெளியேரிய நிலையில், இந்த 10வது வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்க் இன்று (2025 டிசம்பர் 8ம் தேதி) நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஜிவி பிரகாஷ்… ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

இந்த நாமினேஷனுக்காக பிக் பாஸ் போட்டியாளர்கள், எந்த போட்டியாளரை வெளியேற்ற நினைக்கிறார்கள் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி, அதை பிக் பாஸ் மெயின் கதவு வழியாக வெளியே தூக்கி வீசுகிறார்கள். இதில் ஆதிரை FJ வை நாமினேட் செய்திருந்தார். மேலும் மற்ற போட்டியாளர்கள் வியானா, ரம்யா மற்றும் கம்ருதீன் போன்ற போட்டியாளர்களை நாமினேட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியான இந்த புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.