ரவி மோகன் நடிப்பில் வெளியான ப்ரதர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
Brother Movie OTT Update : நடிகர் ரவி மோகன் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ப்ரதர். இந்த நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்ன என்பது குறித்து அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ப்ரதர். இந்தப் படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி சுப்ரமணியம், ராவ் ரமேஷ், VTV கணேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா, அச்யுத் குமார், எம்.எஸ்.பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சுரேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, பில்லி முரளி, பிர்லா போஸ், லொள்ளு சபா சேசு, பயில்வான் ரங்கநாதன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விருத்தி விஷால் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… கருப்பு மற்றும் ஜனநாயகன் படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்




ரவி மோகனின் ப்ரதர் படத்தின் கதை என்ன?
சென்னையில் வழக்கறிஞர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தவறுகள் அனைத்தையும் தட்டிக்கேட்பதாக சுற்றி வருகிறார் நடிகர் ரவி மோகன். இவர் இப்படி இருப்பதால் வீட்டிற்கு பல பிரச்னைகள் வருவதால் அவரது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது. இப்படி இருக்கும் சூழலில் அவரது அக்கா பூமிகா, ரவி மோகனை தனது மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு சென்ற இடத்திலும் தொடர்ந்து பல பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் பூமிகா தனது கணவர் குடும்பத்தில் இருந்து பிரியும் சூழல் ஏற்படுகிறது. அவர்களை ரவி மோகன் எப்படி சேர்த்து வைத்தார் என்பது படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பைசன் காளமாடன் படத்தை வெகுவாகப் பாராட்டிய பிரகாஷ் ராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?