Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கலீஃபா படத்தில் மோகன்லாலின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்

Mohanlal is Mambarakkal Ahmed Ali: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன். இவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்ததாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

கலீஃபா படத்தில் மோகன்லாலின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்
பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மோகன்லால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Dec 2025 22:28 PM IST

மலையாள சினிமாவைப் பொருத்தவரை சின்ன நடிகர், பெரிய நடிகர் என்று எந்த பாரபட்சமும் இல்லை. ஒரு படத்தில் சின்ன காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் நாயகனாக மற்றொரு படத்தில் நடிக்கிறார் என்றால் உச்சத்தில் இருக்கும் நடிகர் அந்தப் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றால் எந்தவித ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார். இது மலையாள சினிமாவில் மிகவும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. ஸ்டார் நடிகர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக திரையில் தோன்றுவது அங்கு சாதாரணமான ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன். இவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து இறுதியாக எல்2 எம்புரான் படத்தில் ஒன்றாக நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்தப் படத்தை பிரித்விராஜ் சுகுமாரன் தான் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் இணைந்து தற்போது கலீஃபா படத்தில் நடிக்க உள்ளனர்.

கலீஃபா படத்தில் மோகன்லாலின் கேரக்டர் இதுதான்:

இந்த நிலையில் கலீஃபா படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடிக்க இதனை இயக்குநர் வைசாக் இயக்கி வரும் நிலையில் இந்தப் படத்திற்கு திரைக்கதையை ஜினு வி. ஆபிரகாம் எழுதியுள்ளார். ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் மோகன்லாலின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read… ஜிவி பிரகாஷின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் பதிவு

பிரித்விராஜ் சுகுமாரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… உலக அளவில் வசூலி கெத்துகாட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன் படம் – அப்டேட் இதோ