கருப்பு மற்றும் ஜனநாயகன் படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்
Karuppu and Jana Nayagan Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா. இவர்களின் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா. இவர்களது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஜன நாயகன் மற்றும் கருப்பு. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி ஜன நாயகன் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள நிலையில் இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்து உள்ளார். இவர்களின் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து பிரபல நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்துள்ள நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




சூர்யா, விஜய் படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்:
இந்த நிலையில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் மற்றும் கருப்பு என இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? இணையத்தில் கசிந்த தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
📺 #Suriya’s #Karuppu and #ThalapathyVijay’s #JanaNayagan – the satellite rights for both films have been bought by #ZTamil for a huge price.
🛒💰 The deal has been closed for a massive amount.
🎬✨ Both these big films are scheduled for release in January.
🔥 Fans are eagerly… pic.twitter.com/rakd9qS2fp
— Movie Tamil (@_MovieTamil) December 7, 2025
Also Read… நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை… ஓபனாக பேசிய கீர்த்தி ஷெட்டி