Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்? வைரலாகும் தகவல்

Thalaivar 173 Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் அப்டேட் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தை யார் இயக்க உள்ளார்கள் என்பது குறித்ததுதான். தொடர்ந்து இது தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்? வைரலாகும் தகவல்
ரஜினிகாந்த் மற்றும் தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Dec 2025 11:21 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்னை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் தனுஷ். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன தனுஷ் அதனைத் தொடர்ந்து தனது 50-வது படமான ராயன் படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்து இருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வரும் தனுஷ் மூன்றாவதாக இயக்கிய படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் இவர் நடிக்கவில்லை. இவரது அக்கா மகனான பவிஷை நாயகனாக அறிமுகம் செய்ய இந்தப் படத்தை இயக்கி இருந்தார் நடிகர் தனுஷ். 2கே கிட்ஸ்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை காட்டும் விதமாக இந்தப் படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் தனுஷ் எழுதி இயக்கி நடித்தப் படம் இட்லி கடை. கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்?

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் சார்பாக தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு பிறகு அவர் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தை அடுத்ததாக யார் இயக்குவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்தை இயக்குவதாக பல இயக்குநர்களின் பெயர்கள் இணையத்தில் தொடர்ந்து அடிபட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் ரஜினிகாந்திற்கு கதை சொன்னதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… வசூலில் ரூபாய் 100 கோடியை எட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்… வைரலாகும் அப்டேட்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 46 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்