Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வசூலில் ரூபாய் 100 கோடியை எட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்… வைரலாகும் அப்டேட்

Tere Ishk Mein Movie Box Office Collection: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படம் தற்போது உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

வசூலில் ரூபாய் 100 கோடியை எட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்… வைரலாகும் அப்டேட்
தேரே இஸ்க் மெய்ன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Dec 2025 18:10 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக தனுஷ் அறிமுகம் ஆன போது பல விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று நேரடியாகவே பலர் விமர்சனம் செய்தனர். தன்னை குறித்து விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் வாயடைத்து போகும் அளவிற்கு தனது நடிப்பில் மூலம் ஹாலிவுட் வரை பிரபலம் ஆனார் நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்ற நடிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஹாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர்கள் செக்சி தமிழ் ஃப்ரண்ட் என்று கூறும் அளவிற்கு அங்கேயும் தனது நடிப்பு திறமையை மிகவும் சிறப்பாக காட்டியுள்ளார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடிக்கும் தனுஷ் அவ்வபோது மற்ற் மொழி இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் இணைந்து நடிகர் தனுஷ் பணியாற்றிய குபேரா படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தனுஷே இயக்கி நடித்த இட்லி கடை படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

உலக அளவில் வசூலில் கலக்கும் தேரே இஸ்க் மெய்ன் படம்:

இதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெய்ன் படத்தில் நடித்து முடித்தார். நடிகை கிருத்தி சனோன் நாயகியாக நடித்து இருந்த இந்தப் படம் கடந்த 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் லவ் ஆக்‌ஷன் பாணியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் உலக அளவில் இதுவரை ரூபாய் 79.75 கோடிகள் வரை வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மூன்வாக் படத்திற்காக ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த விசயம் – வைரலாகும் வீடியோ

தேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தொடர் மழை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த லாக்டவுன் படக்குழு!