Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆண்கள் VS பெண்கள்.. குறைகளை கொட்டித்தீர்த்த போட்டியாளர்கள்… விறுவிறுப்பான டுடே புரோமோ!

Bigg Boss Tamil Season 9: தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டிற்கான பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது தொடங்கி மிக பிரம்மதமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 57வது நாளில் வெளியான ப்ரோமோவில் சுவாரஸ்யமான டாஸ்குகளுடன் இருக்கும் கடைசி வெளியாகியுள்ளது.

ஆண்கள் VS பெண்கள்.. குறைகளை கொட்டித்தீர்த்த போட்டியாளர்கள்… விறுவிறுப்பான டுடே புரோமோ!
ஆண்கள் VS பெண்கள்
Barath Murugan
Barath Murugan | Published: 01 Dec 2025 18:25 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது தமிழில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் கிட்டத்தட்ட 57வது நாளாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 20 போட்டியாளர்கள் மற்றும் 4 வைல்கார்ட் எண்டரிகளுடன் தொடங்கியிருந்த நிலையில், தற்போது மொத்தம் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆதிரை (Aadhirai) தற்போது 5வது வைல்ட் கார்ட் எண்டரியாக மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார். இந்நிலையில் சுவாரஸ்யமாக இந்த நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் 9வது வாரத்தின் தல டாஸ்க் இன்று நடைபெற்றிருக்கும் நிலையில், அதில் ரம்யா ஜோ (Ramya joe) வென்றுள்ளார்.

அதன்படி இந்த பிக் பாஸ் சீசன் 9 வீட்டில் ரம்யா ஜோ 9வது வாரத்தின் தலையாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை இந்த வாரத்தில் யாராலும் நாமினேட் செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 1ம் தேதியில் வெளியான புரோமோ வீடியோவில், சுவாரஸ்யமான டாஸ்க் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆண்கள் Vs பெண்கள் என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் போல இந்த டாஸ்க் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வார வீட்டு தல இவர்தானா? வெளியானது வீடியோ

பிக் பாஸ் சீசன் 9 தமிழில் 57வது நாளின் 2வது ப்ரோமோ வீடியோ பதிவு :

இந்த ப்ரோமோ வீடியோவில் ஆண்கள் VS பெண்கள் என இரு அணியினராக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த டாஸ்கின் நடுவராக கம்ருதீன் மற்றும் அரோரா இருக்கின்றனர். இந்நிலையில் இந்த பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் செய்த குறைகளையும், சாதனையையும் பற்றியும் வாதாடுவது போன்ற இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சபரி, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வி.ஜே. பார்வதி வாதாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எனது பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் – மனம் திறந்த தேவயானி!

இது தொடர்பான ப்ரோமோ தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவிவருகிறது. அதன்படி இன்று 57வது நாளின் எபிசோட் நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலையான ரம்யா ஜோ தேர்ந்தெடுக்க பட்ட நிலையில், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என இணையத்தில் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.