Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபல கோலிவுட் நாயகனின் மகள்.. தற்போது தெலுங்கு பிரபலம்.. இந்த சிறுமி யார் தெரியுமா?

Childhood Photo Of Kollywood Actress: சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் தனது நடிப்பு திறமையின் மூலம் பிரபல நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துவருகின்றனர். இந்நிலையில் அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருவது உண்டு. இந்நிலையில் பிரபல நடிகரின் மகளும், முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வைரலாகிவருகிறது.

பிரபல கோலிவுட் நாயகனின் மகள்.. தற்போது தெலுங்கு பிரபலம்.. இந்த சிறுமி யார் தெரியுமா?
நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 08 Dec 2025 08:30 AM IST

பொதுவாக சினிமாவில் பல்வேறு மொழிகளில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்துவருகின்றனர். தமிழ் மொழியில் அறிமுகமான நடிகைகள் தமிழில் மட்டுமே நடிக்கவேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இன்றி, தமிழைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர்களும் மற்ற மொழி இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பல நடிகர்கள் தனது தந்தை அல்லது உறவினர்களின் செல்வாக்கின் மூலம் சினிமாவில் கதாநாயகனாகவோ அல்லது நாயகியாகவோ அறிமுகமாகி படங்களில் தொடர்ந்து நடித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. அந்த வகையில் மேலே இருக்கு சிறுமி யார் என தெரிகிறதா?. இவர் தமிழ் பிரபல நடிகரின் (Tamil Lead Actor) மூத்த மகள். இவரின் தந்தையின் மூலமாக இவர் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.

மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தி சினிமாவின் (Hindi Cinema) மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின் தமிழில் நடிகர் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக நடித்து அறிமுகமானார். மேலும் தற்போது தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அந்த சிறுமி வேறுயாருமில்லை, உலகநாயகன் கமல்ஹாசனின் (Kamal Haasan) மகள் ஸ்ருதி ஹாசன்தான் (Shruti Haasan).

இதையும் படிங்க: சூர்யா சாருடன் படம் பண்ணவேண்டியதா இருந்தது.. ஆனால் – க்ரித்தி ஷெட்டி!

நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான ஹே ராம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் தனது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் இவருக்கு முதல் படமாக சரோஜா அமையவிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். பின் இந்தியில் 2008ம் ஆண்டில் வெளியான லக் என்ற படத்தின் மூலம் லீட் ரோலில் நடித்து அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. இந்தியை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் முக்கிய நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார் இவர். மேலும் இவருக்கு தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது 7ஆம் அறிவு.

இதையும் படிங்க: இந்த சிறுமி யார் தெரியும்? மோட்டிவேஷனுக்கு ஒரு எடுத்துக்காட்டு… ஆனால் 2 வருடமாக படமில்லை… இந்த நடிகை யாருனு தெரியுதா?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 2011ம் ஆண்டில் இப்படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தமிழில் தளபதி விஜய் முதல் அஜித் குமார் வரை பல்வேறு பிரபலங்களுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது தெலுங்கு மொழியில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். இறுதியாக தமிழில் கூலி படத்தில் ரஜினியின் மகள் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கில் பிரபாஸின் சலார் 2 படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.