ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் கிச்சா சுதீப்பின் மார்க் பட ட்ரெய்லர்!
Mark Movie Tamil Trailer: கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் தென்னிந்திய மொழிகளில் பலவற்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்க் படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னட சினிமாவில் கடந்த 1997 -ம் ஆண்டு வெளியான தயவ்வா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். சினிமாவில் 28 ஆண்டுகளைக் கடந்த இவர் கன்னட சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப்பின் பலப் படங்கள் தமிழ் சினிமாவில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 2012-ம் ஆண்டு இயக்குநர் ராஜமௌலில் இயக்கத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான நானி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானார் நடிகர் கிச்சா சுதீப்.
இந்தப் படத்தில் நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடித்து இருந்தாலும் ஒரு ஈ அவரைப் பாடாய் படுத்துவதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் நான் ஈ படத்தில் நடித்த வில்லன் என்றே பல ஆண்டுகளாக அடையாளப்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மேக்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க்.
இணையத்தில் கவனம் பெறும் மார்க் பட ட்ரெய்லர்:
அதன்படி இயக்குநர் விஜய் கார்த்திகேயா எழுதி இயக்கி உள்ள படம் மார்க். இந்தப் படத்தில் நடிகர் கிச்சா சுதீப் உடன் இணைந்து நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், நிஷ்விகா நாயுடு, ரோஷ்னி பிரகாஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ
மார்க் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here’s the Tamil #MARKTrailer 👊🔥
Action, mass & style overload! 😎💥
Baadshah @kichchasudeepa in pure high-voltage mode.💥#MARKonDec25 #MARKTheFilm@VKartikeyaa@AJANEESHB @Naveenc212 @gurusoms @iYogiBabu @vikranth_offl @iampriya06 @shekarchandra71 @ganeshbaabu21… pic.twitter.com/JTiCp1GOAD— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 10, 2025
Also Read… நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை – விஜய் சேதுபதி



