Shankar: ஐ படத்தில் எனது முதல் சாய்ஸ் அவர்தான்.. இயக்குநர் சங்கர் பகிர்ந்த விஷயம்!
Shankar I Movie First Choice Hero: ஹை பட்ஜெட் திரைப்பட இயக்குநர் என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருபவர் சங்கர்தான். இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் ரஜினிகாந்த் வரை பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் ஐ படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை உச்ச நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருப்பவர் எஸ்.சங்கர் (S. Shankar). இவரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் படங்கள் என்றாலே பிரம்மாண்ட பட்ஜெட்டில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எந்திரன் (Enthiran) திரைப்படத்தை இயக்கி பான் இந்தியா வரை இவர் பிரபலமாகியிருந்தார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியாகியிருந்த படம் தி கேம் சேஞ்சர் (Game changer). இந்த படத்தில் ராம் சரண் (Ram Charan) மற்றும் கியாரா அத்வானி (Kiara Advani) இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது சுமார் ரூ 360 கோடி பட்ஜெட்டில் வெளியான நிலையில், அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் இந்த படம் சங்கருக்கு இந்தியன் 2 படத்தை தொடர்ந்து பெரிய தோல்வி படமாகவே அமைந்தது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், ஐ (I) திரைப்படத்தில் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) வேடத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்ட நடிகர் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த நடிகர் யார் என தெரியுமா?




இதையும் படிங்க: சூர்யாவை அந்த படத்தின்போது பார்த்து பயந்துவிட்டேன்.. ஆனால் – நடிகை சமந்தா ஓபன் டாக்!
ஐ திரைப்படத்தில் சியான் விக்ரம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து மனம் திறந்த சங்கர்:
முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் சங்கர் ஐ படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அதில் அவர், ” ஐ திரைப்படத்தில் சியான் விக்ரம் நடித்த கதாபாத்திரத்திற்கு எனது முதல் சாய்ஸ் தளபதி விஜய் தான். அவரும் இந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்னாரு. பின் அவருக்கு இதில் நடிக்க சரியான தேதி கிடைக்காத காரணத்தினாலே இந்த படத்திலிருந்து அவர் விலகினார். பின் இதில் சியான் விக்ரம் இணைந்தார். அவர் இணைந்ததும் இப்படத்தின் கதையே மொத்தமாக மாறியது” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகபரவிவருகிறது.
இயக்குநர் எஸ் சங்கரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :
View this post on Instagram
சங்கரின் ஐ திரைப்படம் :
சங்கர் மற்றும் சியான் விக்ரமின் கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஐ. இதில் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்காக சியான் விக்ரம் பல்வேறு கடினமான விஷயங்களை செய்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எனது பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் – மனம் திறந்த தேவயானி!
அப்போதே சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் மொத்தம் சுமார் ரூ 240 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படமானது இப்பொது வெளியாகியிருந்தால் மேலும் பல கோடிகளை வசூல் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்தில் முதலில் தளபதி விஜய்தான் நடிக்கவிருந்தார். இதை இயக்குநர் சங்கர் நேர்காணலில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.